“சச்சின் டெண்டுல்கர் 10 ஓவர்கள் ஒரு ஷாட் கூட விளையாடவில்லை, பின்னர் என்னை அடித்து நொறுக்கத் தொடங்கினார்” – 24 வருடங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சேப்பாக்கம் டெஸ்ட் பற்றி மனம் திறந்த பாகிஸ்தான் ஜாம்பவான் !

0
3812

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு கிரிக்கெட் போட்டி ஆகும் . பரபரப்பான இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சச்சின் டெண்டுல்கர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை போராடினார். இந்தப் போட்டியின் போது சென்னை ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் உலக அளவில் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது .

பாகிஸ்தான் அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு போட்டிகளிலும் விளையாடியது . இதில் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி துவங்கி நடைபெற்றது .

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 238 ரண்களுக்கு ஆள் அவுட் ஆனது. முஹம்மத் யூசுப் 53 ரண்களும் மொயின் கான் 60 ரண்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சில் அணில் கும்ப்ளே ஆறு விக்கெட்டுகளையும் ஜவகல் ஸ்ரீநாத் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 254 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சடகோபன் ரமேஷ் 43 ரண்களும் ராகுல் டிராவிட் 53 ரண்களும் சவுரவ் கங்குலி 54 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சக்லைன் முஸ்தாக் ஐந்து விக்கெட்டுகளையும் சாகித் அப்ரிதி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 16 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய பாகிஸ்தான் அணி சாகித் அப்ரிதியின் அதிரடி ஆட்டத்தால் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய சாகித் அப்ரிதி 141 ரண்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் மூன்று சிக்ஸர்களும் 21 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு துணையாக ஆடிய இன்சமாம் உல் ஹக் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வெங்கடேஷ் பிரசாத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.82 ரண்களுக்கு 5 விக்கெட் களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சச்சின் டெண்டுல்கருடன் இணைந்த நயன் மோங்கியா சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைக்க இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. அந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் தனது முதுகு வலி பிரச்சனையோடு அட்டகாசமான சதத்தினை பதிவு செய்தார். பெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அந்த ஆட்டம் ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆக கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.

- Advertisement -

இருவரும் சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 136 ரன்களை சேர்த்தனர். நயன் மோங்கியா 52 ரண்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் பந்துவீச்சில் அவுட் ஆனார். சுனில் ஜோசி ஒருபுறம் இருக்க சச்சின் டெண்டுல்கர் அதிரடியால் இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 136 ரன்கள் எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கர் சக்லைன் முஸ்தாக் சூழலில் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து மீதி இருந்த மூன்று விக்கெட்டுகளும் மூன்று ரன்களில் வீழ்ந்து விட இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த டெஸ்ட் போட்டியை பற்றி அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சக்லைன் முஸ்தாக் தற்போதைய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்து இருக்கிறார். இது பற்றி அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர் ” முதல் இன்னிங்ஸில் நான் சச்சினை விரைவாக அவுட் செய்து விட்டேன். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வரும் போது சச்சின் என்னுடைய பந்துகளில் அவருடைய ஆரம்ப கட்டத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு என்னுடைய அனைத்து விதமான பந்துவீச்சுகளையும் உற்று நோக்கினார். முதலில் 10 அல்லது 12 ஓவர்களுக்கு அவர் என்னுடைய பந்துவீச்சில் எந்தவிதமான எதிர்த்தாக்குதலையும் ஏற்படுத்தவில்லை. என்னுடைய அனைத்து விதமான பந்துவீச்சுகளையும் நன்றாக கணித்த பின்னர் என்னை தாக்கி ஆட ஆரம்பித்தார். அவருக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. போட்டி முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் என்னுடைய கேப்டன் வாசிம் அக்ரமிடம் என்னை மாற்றி விட்டு வேறு ஏதேனும் வந்து வீச்சாளரை வீசச் சொல்லுங்கள் . அவர் என்னுடைய அனைத்து விதமான வந்து வீச்சுகளையும் கணித்து விட்டார் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனக் கூறினேன் . ஆனால் கேப்டன் வாசிம் அக்ரம் தான் என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தொடர்ந்து வீசி செய்தார். இதன் காரணமாக போட்டியின் பரபரப்பான கட்டத்தில் சச்சின் இன் விக்கெட்டை வீழ்த்தி எங்கள் அனை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனக் கூறியிருக்கிறார் .