என் தந்தை உணர்ந்ததை நான் இப்போது உணர்கிறேன்.. மகன் சதம் குறித்து சச்சின் நெகிழ்ச்சி

0
442

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி கோவா அணிக்காக விளையாடிய அர்ஜூனன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியில் தந்தையை போலவே சதம் விளாசினார். மும்பை அணியில் கடந்த சீசனில் இடம்பெற்ற அர்ஜூன் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர், இந்த சீசனில் கோவா அணிக்காக விளையாடினார். சச்சினை போல் அல்லாமல், நன்கு உயரமாக இருக்கும் அர்ஜுன், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேனாக விளங்குகிறார். பேட்டிங் வரிசையில்  7வது இடத்தில் இறங்கிய அர்ஜூன், 178 பந்துகளை எதிர் கொண்டு 100 ரன்களை அடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்போசிஸ் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கரிடம், தனது மகன் அறிமுக போட்டியில் சதம் விளாசியது   குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய சச்சின் டெண்டுல்கர்,  அர்ஜுன் சதம் அடித்த பிறகு, இந்த கேள்வி எழுப்பபட்டு உள்ளது. ஒருதந்தையாக இந்த கேள்வியே புது அனுபவமாக உள்ளது. என் வாழ்க்கையில் நடந்ததை இங்கு நினைவுக்கூற விரும்புகிறேன். ஒரு தந்தையாக நான் என் தந்தை சொன்னது தான் இப்போது நினைவிற்கு வருகிறது. நான் இந்தியாவுக்காக விளையாடிய தொடங்கிய போது பலரும் தன் தந்த்தையை என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்துவார்கள்.

அப்போது என் தந்தையின் நண்பர், அவரிடம் உன் மகனின் பெயரை வைத்து நீ அறிமுகப்படுத்தப்படுவதை எப்படி எடுத்து கொள்கிறாய் என்று கேட்டார்.அதற்கு என் தந்தை தன் வாழ்நாளில் சிறந்த தருணம் என்று பதில் அளித்தார்.மேலும்  சாதனையாளரின் தந்தை என்று அறிமுகப்படுத்தப்படுவதையே அனைத்து தந்தையும் விரும்புவார்கள் என்று பதில் அளித்தார்.

அர்ஜுன் டெண்டுல்கர் பொறுத்தவரை என் மகன் என்பதால், அவருக்கு தேவையற்ற அழுத்தம் தரப்படுகிறது. ஆனால் எனக்கு எந்த அழுத்தமும் சிறுவனாக இருக்கும் போது வரவில்லை. நான் சுதந்திரத்துடன் விளையாடினேன். அந்த வகையில் , அர்ஜூன் டெண்டுல்கருக்கு இனி அழுத்தம், எதிர்பார்ப்பு ஏற்படும். அதனை அர்ஜூன் சவாலாக எடுத்து விளையாட வேண்டும் என்று நான் பலமுறை அறிவுரை வழங்கி இருப்பதாக சச்சின் அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் .

- Advertisement -