தலைசிறந்த 5 பந்து வீச்சாளர்களை விட அதிக பந்துகளை சச்சின் டெண்டுல்கர் வீசியிருக்கிறார் தெரியுமா ?

0
241
Shoaib Akhtar and Sachin Tendulkar

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் அதிக ரன்களை மற்றும் அதிக சதங்களை குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் எவ்வளவு பந்துகளை வீசி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 8054 பந்துகளை வீசி இருக்கிறார். மொத்தமாக இவர் 154 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் இவரது பவுலிங் எக்கானமி 5.1 மட்டும்தான். தற்பொழுது சச்சின் டெண்டுல்கரை விட கம்மியான பந்துவீசிய தலைசிறந்த பந்து வீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

டேல் ஸ்டெயின்

நிச்சயமாக இவரது பெயரைக் கேட்டதும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார், அதே சமயம் மிக அதிக ஓவர்களையும் வீசி இருக்கிறார்.

இருப்பினும் இவர் சச்சின் டெண்டுல்கரை விட கிட்டத்தட்ட 2000 பந்துகள் கம்மியாகத்தான் வீசி இருக்கிறார் என்பதுதான் உண்மை. இவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக வீசிய பந்துகளின் எண்ணிக்கை 6256 ஆகும். இதில் மொத்தமாக இவர் கைப்பற்றிய விக்கட்டுகள் எண்ணிக்கை 196 ஆகும்.

லான்ஸ் குளூஸ்னர்

தென்னாபிரிக்காவில் கேட்க விளையாடிய தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் இவர் மிக அற்புதமாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒருநாள் போட்டிகளில் இவர் மொத்தமாக வீசிய பந்தை களின் எண்ணிக்கை 7336 ஆகும். இதில் இவர் மொத்தமாக கைப்பற்றிய விக்கட்டுகளின் எண்ணிக்கை 171 என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்சேல் ஜாக்சன்

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களில் இவருடைய பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவ்வளவு வேகமாக இவர் பந்து வீசுவார். எதிரணி பேட்ஸ்மேன்களை தனது மின்னல் வேக பந்து வீச்சின் மூலம் திணறடிப்பதில் இவர் வல்லவர்.

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக இவர் மொத்தமாக வீசிய பந்துகளின் எண்ணிக்கை 7489 ஆகும். இதில் இவர் மொத்தமாக கைப்பற்றிய விக்கெட்டுகள் எண்ணிக்கை 153 என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரை விட ஒரு விக்கெட் கம்மியாக தான் இவர் எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோயப் அக்தர்

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்களை அடைய காலகட்டங்களில் இவருடைய பந்துவீச்சு தனியாக தெரியும். அந்த அளவுக்கு வேகமாக பந்து வீச கூடிய வல்லமை படைத்தவர்.

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக இவர் மொத்தமாக வீசிய பந்து களின் எண்ணிக்கை 7764 ஆகும். இதில் இவர் மொத்தமாக கைப்பற்றிய விக்கெட்எண்ணிக்கை 247 என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பிரதமரும் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனும் இவர்தான். உலக அளவில் கணக்கு எடுத்தாலும் ஜாம்பவான் வீரர்கள் பட்டியலில் இவர் நிச்சயமாக இடம் பெறுவார்.

இவர் பாகிஸ்தான் அணிக்காக மொத்தமாக வீசிய பந்து களின் எண்ணிக்கை 7461 ஆகும். இதில் இவர் மொத்தமாக கைப்பற்றிய விக்கட்டுகள் எண்ணிக்கை 182 என்பது குறிப்பிடத்தக்கது.