உன்னை வீட்டுக்கு அனுப்பிடுவேன்.. இளம் வீரருக்கு சச்சின் கொடுத்த எச்சரிக்கை

0
2392

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் களத்தில் கொஞ்சம் டென்ஷனாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. குறிப்பாக அவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் யாரேனும் சிறு தவறு செய்தால் களத்திலே வைத்து திட்டிவிடுவார். இந்த நிலையில் தான் கேப்டன் ஆக இருந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றபோது ஒரு சம்பவம் நடந்ததாக சச்சின் டெண்டுல்கர் நிகழ்ச்சி ஒன்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

அதில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது இளம் வீரர் ஒருவர் பில்டிங் செய்து கொண்டிருந்தார். அங்கு இருந்த ரசிகர்களை பார்த்து அவருக்கு குஷி தாங்கவில்லை. அதனால் அவர்களுடன் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டு இருந்தார். அந்த வேளையில் பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரிடம் வந்தது. அதனை அவர் சரியாக எடுத்து வீசி இருந்தால் ஒரு ரன் தான் போயிருக்கும்.

ஆனால் அவருடைய கவன குறைவு காரணமாக அப்போது இரண்டு ரன்கள் போய்விட்டது. இதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது. நேரடியாக அந்த வீரரின் தோளில் கையை போட்டு மீண்டும் இப்படி ஒரு தவறை நீ செய்தால் உன்னை நேரடியாக நாட்டுக்கு அனுப்பி விடுவேன். இங்கிருந்து உன்னால் அணியின் ஓட்டலுக்கு கூட செல்ல முடியாது. இந்திய அணியில் விளையாடும் போது பெருமையாக உணர வேண்டும். அணிக்காக நான் எதையும் சகித்துக் கொள்ள மாட்டேன்.

உன்னுடைய இடத்திற்காக பல லட்சம் பேர் போட்டி போடுகிறார்கள் என்று பயம் உனக்கு இருக்க வேண்டும். இல்லை என்றால் உன் இடம் உனக்கு கிடையாது என்று கூறியதாக சச்சின் தெரிவித்துள்ளார்
சச்சின் யார் அந்த இளம் வீரர் என்று சொல்ல மறுத்து விட்டார். இந்திய டெஸ்ட் அணியில் 25 போட்டியில் கேப்டனாக இருந்த சச்சின் வெறும் நான்கு போட்டியில் மட்டுமே வெற்றியையும் ,ஒன்பது போட்டியில் தோல்வியையும் 12 போட்டியில் டிராவையும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -