சச்சின் பாண்டிங் சங்கக்கரா சாதனை முறியடிப்பு.. விராட் கோலி ஐசிசி போட்டிகளில் அசத்தல் ரெக்கார்ட்!

0
2596
Virat

இன்று தரம்சாலா மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் ஏதாவது ஒரு அணியின் வெற்றி பயணம் தடைபட போகிறது. மேலும் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.

இந்த நிலையில் இன்று டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் தந்தார்கள். அதற்குப் பிறகு கணிசமான ரன்களில் நான்கு விக்கெட்டுகள் விழ, சூரியகுமார் யாதவ் வந்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இந்த காரணத்தால் தற்பொழுது ஆட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் விராட் கோலி தனியாளாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த விராட் கோலி ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் புதிய மைல்கல் ஒன்றை எட்டி இருக்கிறார்.

விராட் கோலி இன்று ஐசிசி வெள்ளை பந்து தொடர்களில் ஒட்டுமொத்தமாக மூன்றாயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்கின்ற அபூர்வ சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்திருக்கிறார்.

ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் :

விராட் கோலி 3000+ ரன்கள்
கிறிஸ் கெயில் 2942 ரன்கள்
குமார் சங்ககாரா 2876 ரன்கள்
மகேல ஜெயவர்த்தனே 2858 ரன்கள்
ரோகித் சர்மா 2733 ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் 2719 ரன்கள்
ரிக்கி பாண்டிங் 2442 ரன்கள்