சதத்தில் சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

0
875
Viratkohli

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி இன்றுகவுகாத்தியில் மோதி வருகிறது!

முதலில் டாசில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில் களமிறங்கினார்கள்.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 9 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 67 பந்தில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கில் 60 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து விராட் கோலி கலந்தரங்கி ஆட்டத்தை நகர்த்த ஆரம்பித்தார். இன்றைய ஆட்டத்தில் அவரிடம் இருந்து பழைய விராட் கோலியை பார்க்க முடிந்தது. அவரது ரிஸ்ட் பிலிக் ஷாட்கள் அபாரமாக வெளிப்பட்டது.

அரை சதத்தை கடந்த விராட் கோலி மெதுவாக சதத்தை நோக்கி முன்னேறினார். இதற்கிடையில் ஸ்ரேயாஸ் 28, ஹர்திக் பாண்டியா 12 ரண்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இறுதியாக 80 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் விராட் கோலி தனது சதத்தை அடித்தார். ஆயிரம் நாட்களுக்கு மேல் கழித்து இந்தியாவில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

மேலும் உள்நாட்டில் அவர் அடிக்கும் இருபதாவது சதம் இதுவாகும். சச்சின் இந்தியாவில் 20 சதம் அடித்து உலக சாதனை படைத்திருந்தார். இந்தச் சாதனையை தற்பொழுது விராட் கோலி சமன் செய்து இருக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்நாட்டில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் அசின் ஆம்லா தென்னாப்பிரிக்காவில் 14 சதங்கள் அடித்து இருக்கிறார்.

இந்தச் சத சாதனையில் சச்சினை சமன் செய்தும், இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சாதனையில் சச்சினை முறியடித்தும் இருக்கிறார் விராட் கோலி. சச்சின் இதுவரை இலங்கை அணி உடன் எட்டு சதங்களை ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கிறார். விராட் கோலி தற்பொழுது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்களை அடித்து முறியடித்து இருக்கிறார்!

விராட் கோலிக்கு ஒரு நாள் போட்டியில் இது 45ஆவது சதமாகும். டெஸ் போட்டியில் 27 சதங்களையும் டி20 போட்டியில் ஒரு சதத்தையும் அடித்திருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் இது அவருக்கு 73 ஆவது சதமாகும்!