சச்சின் சிறந்த பேட்ஸ்மேனா அல்லது விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா ? – சச்சின் கூறிய சாமர்த்தியமான பதில்

0
2235
Sachin Tendulkar and Virat Kohli

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் பல்வேறு சாதனக்கு சொந்தக்காரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். டெஸ்ட் போட்டிகளில் 200 போட்டிகளில் விளையாடி 51 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் உட்பட 15,921 குவித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் மற்றும் 96 அரைசதங்கள் உட்பட 18,426 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் மொத்தமாக 96 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 16 அரைசதங்கள் உட்பட 2797 ரன்கள் குவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் இதுவரை 34,357 ரன்கள் குவித்து சர்வதேச அளவில் 30,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு இன்றும் சொந்தக்காரராக இருக்கின்றார். அதே போல் சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. இப்படி இன்னும் நிறைய சாதனைகளை நாம் அடுக்கி கொண்டே போகலாம். அந்த அளவுக்கு நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரராக இன்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

- Advertisement -

மறுபக்கம் அவருடைய சாதனைகளை கொஞ்சம் கொஞ்சமாக விராட் கோலி விரட்டி கொண்டு வந்து கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 99 போட்டிகளில் விளையாடி 27 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் உட்பட 7962 குவித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 260 போட்டிகளில் விளையாடி 43 சதங்கள் மற்றும் 64 அரைசதங்கள் உட்பட 12,311 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் மொத்தமாக 325 போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 76
5 அரைசதங்கள் உட்பட 10,221 ரன்கள் இதுவரை குவித்துள்ளார்.

சர்வதேச அளவில் இதுவரை விராட் கோலி 23, 517 ரன்கள் குவித்துள்ளார். அதுபோல சர்வதேச அளவில் இதுவரை 70 சதங்கள் குவித்து தன்னுடைய 71ஆவது சதத்தை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். சச்சின் விளையாடிய காலகட்டத்தை ஒப்பிட்டு தற்பொழுது விராட் கோலியின் காலகட்டத்தைப் விடுவது மிகப்பெரிய தவறு. இருப்பினும் இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி மட்டுமே. விராட் கோலி விளையாடி முடித்து வேலையில் சச்சின் டெண்டுல்கரின் எத்தனை சாதனைகளை அவர் முறியடித்து இருப்பார் என்பதுதான் தற்போது ஒரே கேள்வி.

சாமர்த்தியமாக பதில் சொன்ன சச்சின் டெண்டுல்கர்

சமீபத்தில் நடைபெற்ற உரையாடலில் சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு கேள்வி முன்னெடுத்து வைக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேனா அல்லது விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா என்பதுதான் அந்த கேள்வி. அந்த கேள்வியை கேட்ட அடுத்த நொடியே சச்சின் டெண்டுல்கர் மிக சாமர்த்தியமான பதில் ஒன்றை கூறினார்.

- Advertisement -

“இருவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் தான். இதை இரு பேட்ஸ்மேன்களும் ஒரே அணியில் இணைந்து விளையாடினால் எப்படி இருக்கும் என்பது போல கூறி, இவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடினால் மிக சிறப்பாக இருக்கும்” என்று புன்னகையுடன் கூறி முடித்தார்.

சச்சின் டெண்டுல்கர் சாமர்த்தியமாக பதில் அளித்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிக அளவில் பரப்பி வருகின்றனர். வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.