ஹோகன்ஸ்பர்க் டெஸ்ட்டில் தென்னாபிரிக்கா அபார வெற்றி ; இந்திய அணியின் 30 வருடச் சாதனையையும் சேர்த்து உடைத்து வரலாறு படைப்பு‍

0
1271
Sa beat Ind by 7 Wickets in 2nd Test

சுவாரசியமாக நடந்துகொண்டிருக்கும் இந்திய – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது சவுத்தாப்ரிக்கா அணி. செஞ்சைரியனில் நடந்து முடிந்த முதல் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்கியது. அவ்வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

அதைத் தொடர்ந்து ஜோஹன்ஸ்பர்க் டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவார்கள் என்று அனைத்து ரசிகர்களும் எண்ணினர். ஆனால் அனைத்தும் தலைகீழாய் நடைபெற்றது. முதல் முறையாக ஹோகன்ஸ்பர்க்கில் இந்திய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இங்கு நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா 2 வெற்றி மற்றும் 3 டிரா செய்துள்ளது. 2006இல் டிராவிட் மற்றும் 2018இல் கோஹ்லி வழிநடத்திய இந்திய அணி வெற்றிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுலின் இந்திய அணி அச்சாதனையை தக்க வைத்துக் கொள்ள தவறியுள்ளது

இரண்டாவது போட்டியின் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி. காயம் காரணமாக கேப்டன் கோஹ்லி விலக முதல் முறையாக கே.எல்.ராகுல் டெஸ்ட் அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது. கே.எல்.ராகுல் 50 ரன்கள் கடந்து ஆட்டமிழந்தார். விஹாரி 20, பண்ட் 17, புஜாரா 3 மற்றும் ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். அஷ்வின் போராடி 46 ரன்கள் சேர்க்க இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாபிரிக்கா தரப்பில் ஜான்சன் 4, ரபாடா மற்றும் ஒலிவியர் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

முதல் இன்னிங்சில் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த தென்னாபிரிக்கா அணியை தாக்கூர் சிதைத்தார். 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாபிரிக்கா அணியை குறைந்த முன்னிலையுடன் ஆல் அவுட் செய்ய உதவினார். சவுத் ஆப்ரிக்கா அணியைப் பொறுத்த வரையில் கீகன் பீட்டர்சன் மற்றும் பவுமா 50 ரன்களைக் கடந்தனர்.

27 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணிக் கேப்டன் ராகுல் 8 ரன்களிலும் மயாங்க் அகர்வால் 23 ரன்களிலும் நடையைக் கட்டினர். முதல் இன்னிங்சில் சுதப்பிய புஜாரா மற்றும் ரஹானே, இம்முறை அதிரடியாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 50 ரன்கள் அடித்த பின் விக்கெட்டை பரிகொடுத்தனர். விஹாரி 40, அஷ்வின் 16, தாக்கூர் 28 தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற 266 ரன்களுக்கு அனைவரும் ஆட்டமிழந்தனர்.

240 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாள் ஆட்டம் மழையால் 2 செஷன்கள் தடைபட்டது. ஆனாலும் கேப்டனின் துணையால் தென்னாபிரிக்கா எளிதாக வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. கேப்டன் எல்கர் 96 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடக்கவுள்ளது. அந்த மைந்தாணத்தில் இதுவரை இந்திய அணி ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் கோஹ்லி, அடுத்த போட்டியில் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. அவரது தலைமையில் 3வது டெஸ்ட்டில் வெற்றி கண்டு முதல் முறையாக தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று நம்புவோம்.