பைனலில் சதமடித்த ருத்துராஜ்.. மகாராஷ்டிரா அணிக்கு ஒற்றை ஆளாக போராட்டம்!

0
991

விஜய் ஹசாரே டிராபி இறுதி போட்டியில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.

விஜய் ஹசாரே தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் மகாராஷ்டிரா மற்றும் சௌராஷ்டிரா இரு அணிகளும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சவுராஸ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

மகாராஷ்டிரா அணி துவக்க வீரர் ராகுல் திரிப்பாதி வங்கதேச தொடருக்காக பங்களாதேஷ் சென்றுள்ளதால், துவக்க வீரர்களாக ருத்து ராஜ் மற்றும் பவன் ஷா இருவரும் களமிறங்கினர். சிறந்த பார்மில் இருந்து ருத்துராஜ் இப்பொடியிலும் அதை தொடர்ந்தார். ஒரு முனையில் அவர் நிலைத்து ஆட மற்றொரு முனையில் இருந்த வீரர்கள் சிறு சிறு பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டாகினர்.

பவன் 4 ரன்கள், பச்சவ் 27 ரன்கள், பாவனே 16 ரன்கள் என ஆட்டமிழக்க, 105 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அடுத்துவந்த அசிம் காசி 37 ரன்கள் அடித்தார்.

ஒரு முனையில் அசத்திய ருத்துராஜ் கெய்க்வாட் இடைவிடாமல் இப்போட்டியிலும் சதம் அடித்தார். இம்முறை மிகப்பெரிய சதமாக அவரால் மாற்றமுடியவில்லை. 131 பந்துகளில் 108 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் நான்கு சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும்.

- Advertisement -

இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய ஷேக் 23 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழக்க 50 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் அடித்திருந்தது. சௌராஷ்டிரா அணிக்கு அதிகபட்சமாக ஜீரங் ஜானி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

குவாட்டர் பைனலில் இரட்டை சதம் (220*) செமி பைனலில் சதம் (162) ரன்கள், தற்போது சதம் என தொடர்ச்சியாக இடைவிடாமல் சதம் அடித்து வரும் ருத்துராஜ்-க்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் மலை போல குவிக்கின்றன. அத்துடன் இப்படி ஒரு பார்மில் இருக்கும் இவரை ஏன் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் எடுக்கவில்லை என்றும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்னர் நடந்த தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்தார். ஆனால் அதன் பிறகு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது