சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருத்ராஜ் மராத்தி நடிகையுடன் காதலா? ருத்ராஜ் பதில்

0
149
Ruturaj Gaikwad and Sayali Sanjeev

மகாராஷ்டிராவை சேர்ந்த ருத்ராஜ் கடந்த ஆண்டு சென்னை அணிக்காக முதல் முறையாக களம் இறங்கினார்.தொடரின் கடைசி நேரத்தில் களம் இறங்கினாலும் மிக அற்புதமாக விளையாடிய அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் மூன்று போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை.

அதற்கு அடுத்த போட்டியில் அவர்களை வாய்ப்பு பறிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை வைத்து விளையாட வைத்தார். நம்பியது போலவே அதற்கடுத்த போட்டிகளில் மிக சிறப்பாக ருத்ராஜ் விளையாடினார். கொல்கத்தா பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக மிக அற்புதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

முதல் மூன்று போட்டிகளில் வெறும் இருபது ரன்களை மட்டும் குறித்த அவர் மற்ற நான்கு போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி 176 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு அரை சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மராத்தி நடிகை சாயாலி சஞ்சீவ்வுடன் காதலா?

ருத்ராஜ் தற்போது இன்ஸ்டரெம் வலைதளத்தில் அதிகமாக காணப்படுகிறார். மராத்தி நடிகை சாயாலி சஞ்சீவ் பதிவிட்ட ஒரு பதிவில் ருத்துராஜ் ஒரு கமெண்ட் செய்திருந்தார். அவர் செய்த கமெண்ட் ” வாவ் 😍❤️”. பதிலுக்கு அந்த நடிகையும் இமோஜி மூலம் கமெண்ட் செய்திருந்தார். அந்த நடிகை செய்த கமெண்ட் “❤️❤️❤️❤️🙈”.

இந்நிலையில் இவர்கள் இருவரும் செய்த கமெண்ட் சமூக வலைதளங்களில் அனைவரது கண்களையும் கவர்ந்தது. அனைத்து ரசிகர்களும் இவரது பதிவின் கீழ் அந்த நடிகையை இணைத்து வைத்து பேசத் தொடங்கினார்கள். விஷயம் எல்லை மீறிப் போக ருத்துராஜ் நகைச்சுவையாக, கிரிக்கெட்டில் என்னை அவுட்டாக வேண்டுமென்றால் ஒரு பந்து வீச்சாளரால் மட்டும் தான் முடியும். எனவே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று நக்கலாக பதிலளித்துள்ளார்.

இருப்பினும் இவர்கள் இருவருக்கும் காதல் உள்ளதா அல்லது இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. இனிவரும் நாட்கள் தான் இவர்கள் இருவரும் வெறும் நண்பர்களா அல்லது காதலர்களா என்பதை கூற முடியும். வருகிற ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ருத்துராஜ் முதல் முறையாக இந்திய அணிக்காக முதல்முறையாக விளையாட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.