செமி-பைனலில் 168 ரன்கள் அடித்த ருத்துராஜ்; சிறப்பான தரமான சம்பவம்!

0
684

விஜய் ஹசாரே அரை இறுதி போட்டியில் 168 ரன்கள் அடித்திருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.

இந்திய உள்ளூர் 50 ஓவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் அசாம் இரு அணிகளும் மோதி வருகின்றன.

- Advertisement -

டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. மகாராஷ்டிரா அணிக்கு துவக்க வீரர்களாக நட்சத்திர வீரர் ருத்துராஜ் மற்றும் ராகுல் திரிப்பாதி இருவரும் களமிறங்கினர்.

குவார்ட்டர் பைனலில் 9 ரன்களுக்கு அவுட் ஆன ராகுல், செமி-பைனலில் மூன்று ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பச்சவ் ருத்துராஜுடன் ஒரு ஜோடி சேர்ந்து சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தார். 95 ரன்கள் அடித்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. பச்சவ் 41 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு உள்ளே வந்த அங்கீத் பாவ்னே-ருத்துராஜ் ஜோடி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி அசாம் பந்துவீச்சாளர்களுக்கு பல சிக்கல்களை கொடுத்து வந்தது.

- Advertisement -

கால் இறுதிப் போட்டியில் இரட்டை சதம் அடித்து பல சாதனைகளைப் படைத்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் செமி-பைனலில் சதம் விளாசினார். அதன் பிறகும் நிற்காமல் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி வந்த இவர் 150 ரன்கள் கடந்தும் விளையாடி வந்தார்.

கடைசியாக 126 பந்துகளில் 168 ரன்கள் அடித்து ரியான் பராக் பந்தில் அவுட் ஆனார். இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகளை அடித்தது குறிப்பிடத்தக்கது

ருத்துராஜூடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த அங்கீத் பாவ்னே சதம் அடித்து அசத்தினார். இவர் 89 பந்துகளில் 110 ரன்கள் அடித்து அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்துள்ளது.