“அடுத்த சிஎஸ்கே கேப்டன் தயார்” – ருத்ராஜ் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்

0
739
Ruturaj csk IPL

ஐபிஎல் போட்டி தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருகிறது . அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் எம் எஸ் தோனி ஆவார் .

அவர் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யார் இருப்பார் என்று இப்பொழுது ஆருடங்கள் தொடங்கிவிட்டன . இவ்வேளையில் மஞ்சள் படையான சிஎஸ்கே ரசிகர்கள் ருத்ராஜ் கெய்க்வாடை சில நாட்களாக சிஎஸ்கே வின் புதிய கேப்டனாக பாவித்து கொண்டாடி வருகின்றனர் இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை .

- Advertisement -

கடந்த திங்களன்று நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதின இதில் முதலில் ஆடிய மகராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 330 ரன்களை குவித்தது . மகாராஷ்டிரா மற்றும் சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான ருத்ராஜ் 159 பந்துகளில் 220 ரன்களை குவித்தார் . இதில் 16 சிக்ஸர்களும் 10 பௌண்டரிகளும் அடக்கம்.

இதே போட்டியில் அவர் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இதனை அடுத்த ஆடிய உத்தரப்பிரதேச அணி 47..4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்கள் மட்டுமே எடுத்தது . மகாராஷ்டிரா அணிக்காக சிறப்பாக பந்து வீசிய இளம் ஆல் ரவுண்டர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மகாராஷ்டிரா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ருத்ராஜிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அவர் செய்த செயல்தான் அவரை சிஎஸ்கே வின் வருங்கால கேப்டனாக ரசிகர்கள் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது .

- Advertisement -

போட்டியின் இறுதியில் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை அந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் ஆல் ரவுண்டர் ஹங்கரேக்கருக்கு வழங்கியுள்ளார் . இது ரசிகர்களிடம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இது குறித்து பேசி உள்ள ருத்ராஜ் ” நான் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் ஹங்கரேக்கரின் பந்து வீச்சு எதிரணியை குறைந்த ரன்களில் ஆட்டம் இழக்க செய்ய உதவியது. என்னுடைய ரன்கள் எப்படி வெற்றிக்கு காரணமாக அமைந்ததோ அதுபோலவே அவரது பந்து வீச்சும் அணிக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது . அதனால் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கினேன் என்று கூறினார் .

இதனால் நெகிழ்ந்து போன ரசிகர்கள் இவரைப் போன்ற ஒரு வீரர் தான் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி மகிழ்கின்றனர் . ருத்ராட்ச ஆட்டநாயகன் விருது வழங்கிய ஹங்கரேக்கரும் சிஎஸ்கே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது .