வளர்த்த கடா மார்பில் குத்தியது.. ருத்துராஜ்க்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் தோனி இல்லை

0
5969

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பல்வேறு பிரச்சனைகளை உள்ளுக்குள் சந்தித்து வருகிறது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே கை கழுவிவிட்டது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ரவீந்திர ஜடேஜா மோதல் போக்கை கடைபிடித்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜாவை கேப்டனாக நியமித்து விட்டு அவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் சென்னை அணி நிர்வாகம் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் அணி தோல்விக்கு முழு காரணமும் ஜடேஜா தான் என பெயர் வந்ததால் அவர் கடுப்பாகி அணியை விட்டு விலகும் முடிவுக்கு வந்துள்ளார். சென்னை அணியை சமூக வலைத்தளத்திலிருந்து பின் தொடர்வதை ஜடேஜா நிறுத்திவிட்ட சம்பவமும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு வீரர்களுக்கு கிரிக்கெட்டிலும் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையை கொடுத்துள்ளது.அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர் ருத்துராஜ் கெய்க்வாட். பெயரை அறியாத ருத்ராஜ் கெய்க்வாட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதும் ஒரே இரவில் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்தார்.

சென்னை அணியின் எதிர்காலமே ருத்துராஜ் தான் என ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர். ஆனால் ருத்துராஜ் சிஎஸ்கேவுக்கும் ஏதோ பிரச்சனை இருப்பது போல் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் ஐபிஎல் தொடர் நடைபெற்ற போது ருத்துராஜ் தோனியை குறித்து புகழ்ந்து பலமுறை பேசியிருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைந்ததற்கு தோனி தான் காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தற்போது இருக்கிறார்.அவரிடம் பிசிசி இணையதளத்திற்காக நடத்திய நேர்காணலில் உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் ருத்ராஜ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என மூன்று வீரர்களின் பெயரை குறிப்பிட்டார்.

இதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் தோனி ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. தோனியால் சிஎஸ்கே அணிக்கு கொண்டுவரப்பட்டு தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ருத்துராஜ் தோனியின் பெயரை குறிப்பிடாமல் விட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் ஜடேஜாவை தொடர்ந்து ருத்ராஜ் கெய்க்வாட்டும் தோனிக்கும் ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.