“ருதுராஜ் வெட்கமே இல்லாதவர்; என் விருதையும் அவரே வாங்கிக் கொண்டார்!” – தீபக் சகர் சுவாரசிய பேச்சு!

0
7538
Deepak

நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் தந்தார்.

- Advertisement -

அடுத்து குஜராத் பேட்டிங் செய்யும்பொழுது பந்துவீச்சில் பவர் பிளேவில் தீபக் சகர் சகா விக்கட்டை கைப்பற்றி முதல் சரிவை குஜராத் அணிக்கு ஆரம்பித்து வைத்தார்.

மீண்டும் தனது நான்காவது ஓவரை வீச வந்து சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தி அடுத்து இறுதிச் சரிவை குஜராத் அணிக்கு ஏற்படுத்தி வைத்தார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார். மேலும் ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஒரு கேட்ச் பிடித்தார்.

மேலும் இந்தப் போட்டியின் போது ருத்ராஜ் 18 வது ஓவரில் விஜய் சங்கர் அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் இருந்து ஓடி வந்து முன்னோக்கி டைவ் அடித்து அபாரமான கேட்ச் பிடித்தார். மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் சிறந்த கேட்ச் பிடித்ததற்கான விருதையும் அவரே வென்றார்.

- Advertisement -

போட்டிக்கு பின் ருத்ராஜ் உடன் பேசிய தீபக் சகர் கூறும் பொழுது ” ருத்ராஜ் வெட்கமே இல்லாதவர். மீண்டும் ஒருமுறை சிறந்த கேட்ச்கான விருதை வென்றிருக்கிறார். இந்த முறை அந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்தேன். எனவே உங்கள் விருதில் இரண்டில் ஒன்று எனக்கு கொடுங்கள்!” என்று விளையாட்டாக கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ருத்ராஜ் ” இதில் முதலில் முயற்சி முக்கியமானது. என்னுடைய கேட்ச் ஒரு டைவிங் முயற்சி. அதுவும் ஆட்டத்தில் முக்கியமான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட கேட்ச். ஆனால் ஆட்டம் முடியும் சூழ்நிலையில் நீங்கள் கேட்ச் எடுத்தீர்கள். ஆனாலும் உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் காயத்திலிருந்து திரும்பிய பிறகு இப்படி ஒரு கேட்சை ஓடிச் சென்று பிடித்து இருக்கிறீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய ருத்ராஜ்
“இந்த சீசனில் எங்களுக்கு வெளி விளையாட்டுகளே இல்லை. எல்லா இடத்திலும் எங்கள் ஆதரவாளர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் மகி பாய்க்காக வந்திருந்தனர்.

இந்த போட்டி குஜராத்தில் நடந்திருந்தாலும் 60க்கு 40 என்று எங்களுக்கு ஆதரவு இருந்திருக்கும். நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் ரசிகர்கள் வருவது எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது.

கடந்த சீசன் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக இல்லை. மேலும் அணியும் சிறப்பாக செயல்படவில்லை. எனவே தொடரில் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் தொடக்க பார்ட்னர்ஷிப் முக்கியம் என்று நான் உணர்ந்தேன்” என்று கூறியிருக்கிறார்!