ருதுராஜ் கெய்க்வாட் 4 சதங்கள் குவித்த்தும் பயனில்லாமல் முடிந்த விஜய் ஹசாரே தொடர் – இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு

0
788
Ruthuraj Gaikwad

இந்த ஆண்டிற்கான விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இனி காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள், அதனைத் தொடர்ந்து இறுதியில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கின்றன. லீக் போட்டிகளுக்கான சுற்றின் முடிவில் குரூப் டி பிரிவில் மகாராஷ்டிரா அணி 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. அந்த ஒரு போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக காலிறுதிக்கு செல்ல முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் ஐந்து போட்டிகளில் 4 சதங்கள் குவித்து அனைவர் மனதிலும் தற்பொழுது இடம் பெற்றுள்ளார். 4 சதங்கள் குவித்தும் அவரது அணி காலிறுதி சுற்றுக்கு தகுதியடையாமல் போனது, ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள் குவித்து ருத்ராஜ் கொக்கரிப்பு

மகாராஷ்டிரா அணியை கேப்டனாக தலைமை தாங்கிய சிறப்பாக வழிநடத்தி யதோடு மட்டுமல்லாமல், ஐந்து போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 603 ரன்களில் அவர் இந்த தொடரில் குவித்துள்ளார். இந்த தொடரில் அதிக பட்சமாக அவர் இன்று சண்டிகர் அணிக்கு எதிராக 168 ரன்கள் குவித்திருக்கிறார். ஐந்து போட்டிகளில் 51 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்சர்கள் அவர் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்து போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 150.75 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 112.92 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக அற்புதமாக 50 ஓவர் கிரிக்கெட் ஃபார்மேட்டில் விளையாடி வரும் அவர் கூடிய விரைவில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்று குறிப்பாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்ற ஒரு நாள் தொடரில் அவர் இடம்பெறவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் இடம் பெற்ற அவர் இதே போன்று சிறப்பாக விளையாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.