செல்பி எடுக்க வந்த மைதான ஊழியரை திடீரென தள்ளிவிட்ட ருத்துராஜ் – வைரலாகி வரும் வீடியோ இணைப்பு

0
261

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி என்பதால் இப்போட்டி சுவாரசியமாக நடக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் கழித்தே துவங்கியது.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. போட்டி தாமதமாக ஆரம்பித்தாலும் இன்று போட்டி முழுவதுமாக நடைபெறும் என்று ஆர்வத்துடன் ரசிகர்கள் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் சில நிமிடங்களிலேயே மீண்டும் மழை குறுக்கிட தற்போது மீண்டும் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.3.3 ஓவர் வீசப்பட்டு இருக்கும் நிலையில் இந்திய அணி தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

- Advertisement -

மைதான ஊழியரை தள்ளிவிட்ட ருத்துராஜ்

ஆட்டம் சிறிது நேரம் கழித்து துவங்கும் என்பதால் டக் அவுட்டில் ருத்துராஜ் அமர்ந்திருந்தார். அப்பொழுது மைதான ஊழியர் ஒருவர் தனது மொபைலை எடுத்து அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து செல்பி எடுக்க முயற்சித்தார்.அதை கவனித்த ருத்துராஜ் அந்த ஊழியரை தள்ளிவிட்டார். அவர் அவ்வாறு ஊழியரை தள்ளிவிடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மைதான ஊழியரை தள்ளிவிட காரணம் இருக்கிறது

- Advertisement -

2018 முதல் ஐசிசி கொண்டு வந்த ஒரு முக்கிய நிபந்தனை ஒரு போட்டி நடைபெறுவதற்கு முன்னர் அணி வீரர்கள் அனைவரும் தங்களது மொபைல் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் அனைத்தையும் ஒப்படைத்து விட வேண்டும். பிக்சிங் போன்ற விஷயங்களில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்வாறு ஒரு நடவடிக்கையை ஐசிசி எடுத்தது.

இவ்வாறு செய்வதன் மூலம் வீரர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்காது. வீரர்கள் மட்டுமின்றி மைதான ஊழியர்களும் மொபைலை இவ்வாறு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி அந்த ஊழியர் அவ்வாறு செல்பி எடுக்க முயற்சித்ததால், ருத்துராஜ் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.