பிரபல சர்வதேச அம்பயர் கார் விபத்தில் மரணம் – அதிர்ச்சித் தகவல்

0
182
Rudi koertzen

இந்த வருடம் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர்களை நாம் விபத்தில் இழந்திருக்கிறோம். தற்பொழுது கிரிக்கெட்டில் மிகப்பிரபலமான நமக்கு நன்கு பரிச்சயப்பட்ட சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஒருவரை மீண்டும் விபத்தில் இழந்திருக்கிறோம்!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரூடி கோர்ட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான நடுவர் ஆவார். தற்போது இவருக்கு 73 வயதாகிறது. இவர் தென் ஆப்பிரிக்காவின் டெஸ்பாட்ச் பகுதியில் நெல்சன் மண்டேலா பேவில் வசித்து வந்தார்.

- Advertisement -

இவர் கடந்த வாரத்தில் தனது நண்பர்களுடன் ஒரு கோல் போட்டிக்கு சென்றிருக்கிறார். திங்கட்கிழமை இவர் வீட்டிற்கு திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் ஒரு சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். மேலும் இந்த விபத்தில் இவரோடு மூன்று பேரும் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இளவயதில் இருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ரூடி கோர்ட்சன் இளவயதில் தென்னாப்பிரிக்க ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிந்து கொண்டே தென்னாப்பிரிக்க லீக் போட்டிகளில் விளையாடினார். 1981ஆம் ஆண்டு முதன் முதலில் நடுவரான இவர் அதற்கடுத்து 11 ஆண்டுகள் கழித்து சர்வதேச நடுவர் ஆக உயர்வு பெற்றார். மொத்தம் 330 ஒரு சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக பணிபுரிந்து உள்ள இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மோதிய டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டார்.

ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் கூறும் பொழுது ” உண்மையில் நான் ஓய்வு பெறுவதற்கு மிக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என் முன் வரிசையாக வேலைகள் உள்ளன. இருந்தாலும் என் ஓய்வு காலத்தை என் குடும்பத்தினருடன் நான் மகிழ்ச்சியாக செலவழிப்பதை விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ஓய்வுக்குப் பிறகு இப்படியான ஒரு துர் சம்பவம் அவரது கனவை சிதைத்து போட்டிருக்கிறது.

- Advertisement -