டி20 உலகக் கோப்பைக்கான இந்திய பாஸ்ட் பவுலர்கள் இவர்கள்தான் – ரவி சாஸ்திரி!

0
476

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த 20 20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறியது. இதனால் தற்போது இந்திய கிரிக்கெட் அணி மிகப் பெரிய நெருக்கடியில் இருக்கிறது என்றே கூறலாம். இந்த முறை அரையிறுதிக்கு தகுதி பெறுவது அல்ல இறுதிப்போட்டிக்கு போவது என்பதைத் தாண்டி கோப்பையை வென்றாக வேண்டிய மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது!

இதற்காக புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் சேர்ந்து பல பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த பரிசோதனை முயற்சி பேட்டிங் பீல்டிங் வீரர்கள் களம் இறங்கும் இடங்கள் பந்துவீச்சு கூட்டணி என எல்லா மட்டங்களிலும் தொடர்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார் பின்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக்கொண்டால் வேகப்பந்து வீச்சிற்கு ஜஸ்பிரித் பும்ரா முகமத் சமி புவனேஸ்வர் குமார் மூவரும் மிக உறுதியாய் அணியில் இருப்பதாகவே தெரிகிறது. நான்காவது ஐந்தாவது வேகப்பந்துவீச்சாளர் காண தேடலில் தற்போது ரோகித் ராகுல் டிராவிட் கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்காக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்தீப் சிங், வழக்கை வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோரைக் கொண்டு பரிட்சித்து வருகிறது!

செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக யார் யார் இடம் பெறுவார்கள் யார் யார் இருந்தால் சரியாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவர் இது பற்றி கூறும் பொழுது ” நான் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கிறேன் ஏனென்றால் இந்திய அணிக்கு வெரைட்டி தேவை. ஆஸ்திரேலிய மைதானங்களை பொருத்தவரை இடதுகை வீரர்கள் ஒரு நல்ல சிறப்பான செயல்பாட்டை தருவார்கள் எப்பொழுதும். இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் உருவாக்கும் பவுன்சர் மற்றும் கோணங்கள் சிறப்பாக இருக்கும். இதனால் அர்ஸ்தீப் சிங்கை இங்கே இந்திய அணிக்குள் வேகப்பந்து வீச்சாளராக கொண்டுவருவது சிறப்பான ஒன்றாக இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சு படையை பலமாக்கும்” என்று கூறினார் !

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசிய ரவிசாஸ்திரி “இடது கை வேகப்பந்து வீச்சாளர்வீரர் அர்ஸ்தீப் சிங், வேகப்பந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த இருவரோடு பும்ரா புவனேஸ்வர் குமார் உறுதியாய் இருப்பார்கள் இவர்களோடு முகமது சமயம் அணியில் இடம் பெறுவது உறுதி என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்!