2022 ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னா விலை போகததற்கு இதுதான் காரணம் – குமார் சங்கக்காரா கருத்து

0
96
Suresh Raina and Kumar Sangakkara

மிஸ்ட்டர் ஐ.பி.எல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஏராளமான சாதனைகள் படைத்தவர். சொல்லப்போனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக விளங்கியவர். 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தால் சி.எஸ்.கே அவரைத் தக்கவைத்துக் கொள்ள தவறியது. நேரடியாக ஏலத்திற்கு வந்த ரெய்னாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி. சென்னை அணி மீண்டும் அவரை வாங்க மறுத்தது. மற்ற அணிகளும் அவரை அணியில் சேர்த்துக் கொள்ள பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை.

இது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனியின் சொந்த சகோதரர் போலவும் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த ரெய்னாவை ஏலத்தில் வாங்காதது ரசிகர்களால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பல முக்கிய கட்டத்தில் அதிரடியாக ஆடி அணிக்கு பங்களித்துள்ளார். அப்படிப்பட்ட வீரர் இன்று அவ்வணியுடன் இல்லை என்பது ஜீரணிக்க முடியாத ஓர் செய்தி தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை இயக்குநர் குமார் சங்கக்காரா, கிலப்ஹவுஸில் ரெட் புல் கிரிக்கெட் எனும் நிகழ்ச்சியில் ரெய்னா விலை போகாதது குறித்துப் பேசினார். ஒவ்வொரு வருடமும் புதுப் புது வீரர்கள் நுழைகின்றனர். அவர்கள் சிறப்பாக ஆடி தங்களுக்கான புகழைத் தேடித் கொண்டு அணியில் இடத்தைத் பிடித்துவிடுவர் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, “ ஐ.பி.எலில் சுரேஷ் ரெய்னாவுக்கு அளவற்ற புகழ் உள்ளது. அவர் இத்தொடரின் லெஜன்ட். எந்த ஆண்டும் தவறாமல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஓர் வீரர். இருப்பினும், நுணுக்கமான விவரங்களை எடுத்துப் பார்த்தால் அவர் இந்த சீசனுக்கு தேவையில்லை என்றே சொல்லலாம். ” அதுமட்டுமில்லாமல் அவரின் சமீபத்திய ஃபார்ம் பெரிதாக இல்லை. உள்ளூர் போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் நிச்சயம் வாங்க மறுக்கும். ஏலத்தில் விலைபோகாத ரெய்னா தற்போது வர்ணையாளராக ஐ.பி.எலுக்குள் நுழைய உள்ளார்.