“டிகே அவுட், ரிஷப் பண்ட் இன்” பிளேயிங் லெவனில் மாற்றம் செய்துள்ளது இந்திய அணி? – வெளியான ரிப்போர்ட்!

0
713

சூப்பர் 12 சுற்றில் பங்களாதேஷுடன் மோதும் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் வரலாம் என இங்கே கணிக்கப்பட்டுள்ளது.

எட்டாவது டி20 உலக கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது நான்காவது சூப்பர் 12 போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -

இப்போட்டியில் நிச்சயம் இந்திய அணி வென்றாக வேண்டும். வங்கதேச அணியிடம் தோல்வியை தழுவும் பட்சத்தில் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஆகையால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை முழு கவனத்துடன் தேர்வு செய்து வருகின்றனர் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா.

சவுத் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியின் நடுவே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதுகு பகுதியில் அசௌகரியமாக இருக்கிறது என்று அணியின் பிசியோவை அழைத்து பரிசோதனை செய்து கொண்டார் அப்போதும் வலி குறையவில்லை என்பதால் உடனடியாக பெவிலியன் திரும்பினார். மீதம் இருக்கும் ஓவர்களுக்கு இந்திய அணி சார்பாக ரிஷப் பண்ட் கீப்பிங் செய்தார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு தினேஷ் கார்த்திக் வலை பயிற்சியில் ஈடுபட்டதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால் ரிஷப் பன்ட் பிளேயிங் லெவனில் இருப்பதற்கு அனேக வாய்ப்புகள் இருக்கின்றன.

- Advertisement -

அதேபோல் கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இருப்பார். ஏனெனில் ரோகித் சர்மா அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வைக்க முடிவு செய்து இருக்கிறார்.

தீபக் ஹூடா இடம் தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் அவரும் அணியில் இருப்பார் என தெரிகிறது. ஏனெனில் வங்கதேச அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் இடது கை பேட்ஸ்மேன்கள். அப்போது தீபக் ஹூடா பந்து வீச்சில் முக்கிய பங்களிப்பை கொடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

வங்கதேச வீரர்கள் ரிஸ்ட் ஸ்பின் பவுலிங்கிற்கு எப்போதும் திணறி இருக்கின்றனர். அந்த வகையில் நிச்சயம் அஸ்வின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்றும் தெரிகிறது

உத்தேச பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா(கேப்டன்), கே எல் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹுடா, ஹார்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, அர்சதீப் சிங்