ரோகித் விராட் சூர்யா மூன்று அரை சதங்கள்; இந்திய அணி எளிதான வெற்றி!

0
328
Ind vs Ned

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பையில் இன்று இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து சிட்னி மைதானத்தில் விளையாடியது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ரோகித்சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்க, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 9 ரன்களில் வெளியேறினார்.

இதற்குப்பிறகு ரோகித் சர்மா விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கடுத்து விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். ஆரம்பத்தில் பொறுமை காட்டிய விராட் கோலி பின்பு கொஞ்சம் வேகமாக விளையாடி இறுதிவரை களத்தில் நின்று 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்த இருவரது கூட்டணி 95 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

இதற்குப் பிறகு களமிறங்கிய நெதர்லாந்து அணி இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன்கள் எடுக்க திணறியது. அந்த அணியின் ஏழாவது பேட்ஸ்மேன் டிம் பிரங்கிளின் 15 பந்துகளில் எடுத்த 20 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள் ஆகும். 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 123 ரன்களை 9 விக்கெட் வித்தியாசத்தில் எடுத்தது. இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல் நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 3 ஓவர்கள் பந்துவீசி 9 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஸ்தீப் நான்கு ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார். முகமது ஷமி 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.