ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடுவாரா? யார் கேப்டன்? – லேட்டஸ்ட் அப்டேட்!

0
122
Rohit sharma

இந்திய அணி இங்கிலாந்தில் இருந்த வெஸ்ட்இன்டீஸ் சென்று முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று, அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இதில் முதல் மூன்று ஆட்டங்களில் வெஸ்ட்இன்டீஸில் நடந்திருக்க, 2-1 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. அடுத்த இருபோட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்திலுள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற மைதானத்தில் நடக்க இருக்கிறது!

- Advertisement -

மூன்றாவது டி20 போட்டியின் போது முதல் 20 ஓவர்கள் பீல்டிங்கில் களத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வந்ததும் முதுகு பிடிப்பால் பாதிக்கப்பட்டு உடனே களத்தை விட்டு ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்!

பின்பு இந்திய அணி போட்டியில் வென்ற பிறகு பேசிய ரோகித் சர்மா, தற்போது பரவாயில்லை எனவும், அடுத்த போட்டிக்கு இடையில் மூன்று நாட்கள் இடைவெளி உள்ளதால் தேறி வருவது சுலபம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்திய அணி அமெரிக்காவிற்குச் செல்ல, அங்கிருந்து ரோகித் சர்மாவின் உடல்நிலை பற்றி வெளியிடப்பட்ட செய்தியில், அவர் முழுமையாகத் தேறிவிட்டதாகவும், அவர் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதி என்றும் தெரிவிக்கப்பட்டது!

- Advertisement -

இந்த நிலையில் சற்று முன் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், ரோகித் சர்மா நூறு சதவிகிதம் தேறியிருந்தால் மட்டுமே விளையாடுவார். இல்லையென்றால் அவர் விளையாட மாட்டார். இந்த விசயத்தில் ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை. நாளைதான் முடிவு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது!

ஒருவேளை நாளைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடாவிட்டால் ரிஷாப் பண்ட் இல்லை ஹர்திக் பாண்ட்யாதான் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள். இதில் குறிப்பாக ரிஷாப் பண்ட்டை விட ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டன் பொறுப்பை தற்காலிகமாய் ஒப்படைக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரிஷாப் பண்ட்டின் தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்பட்டது, ஆனால் ஐபிஎல், அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், பவுலராகவும் ஹர்திக் பாண்ட்யா மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!