விராட் கோலியைப் போல ரோஹித் ஷர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து ஓடப் போகிறார் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

0
65
Sanjay Manjarekar about Rohit Sharma

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில், ஐ.பி.எல் ஆண்டைகளான சென்னையும், மும்பையும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதுதான், மற்ற ஐ.பி.எல் செய்திகளை விட, முதன்மை செய்தியாக இருந்து வருகிறது. மேலும் இவர்களின் தொடர் தோல்வியால், டி.ஆர்.பி ரேட்டிலும் 33% சரிவை சந்தித்துள்ளது ஐ.பி.எல் தொடர்!

நேற்றைய பெங்களூர் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி வென்றதோடு, பவர்-ப்ளேவில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் தீக்சனாவை வைத்து விக்கெட்டுகளையும் எடுத்து, தன் பவர்-ப்ளே பவுலிங் குறையைச் சரி செய்திருக்கிறது. மேலும் பிராவோ, பிரட்டோரியஸ், ஜோர்டான் என சென்னை அணி விக்கெட் டேக்கிங் எபிலிட்டி இருக்கும் பவுலர்களை, மிடில் மற்றும் டெத் ஓவர்களிலும் வைத்திருக்கிறது.

ஆனால் மும்பை அணியைப் பொறுத்த வரை பவுலிங் என்று எடுத்துக்கொண்டால், எல்லாப் பக்கத்திற்கும் பும்ரா மட்டுமே இருக்கிறார். அவரைத் தவிர்த்து பார்த்தால், நம்பிக்கையளிக்கும் விதத்தில் ஒரு பந்து வீச்சாளரும் இல்லை. ஆர்ச்சர் வந்தால் கூட, மிடில் ஓவர் பிரச்சினை தீராது போலத்தான்.

இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கும், அவர் இந்திய அணியின் கேப்டனாய் பொறுப்பேற்றதிலிருந்தே மிகவும் மந்தமாய் இருப்பதோடு, சீக்கிரத்தில் ஆட்டமும் இழந்து விடுகிறார். இதனால் சமீப காலங்களில் இந்திய அணிக்குக் கீழ வருகிற பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கிறார்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தோ என்னவோ, இந்திய அணியின் முன்னாள் வீரரும், பல சர்ச்சை கருத்துகளைக் கூறுபவருமான சஞ்சய் மஞ்ரேக்கர், சில கருத்துக்களைக் கூறியுள்ளார், அதில் “விராட் கோலியின் பாணியில், இந்த ஐ.பி.எல் தொடருக்கு பின்பாக, மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து விலகிவிடுவாரென்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை நிர்வகித்து வரும் ஒருவர், உள்நாட்டு அணி ஒன்றின் கேப்டன் பதவியை எப்படித் துறப்பாரென்று சஞ்சய் மஞ்ரேக்கர் நினைக்கிறாரென்று புரியவில்லை!