கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“பவுலிங்ல இன்னைக்கு ரோகித் சர்மா இதை செஞ்சே ஆகனும்!” – சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல்!

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் ஐந்து முறை உலக சாம்பியனாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்துள்ள ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் மோதுகின்றன.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சிறிது பிரச்சினையை கொடுத்த இரண்டு அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துதான் இருக்கிறது.

எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு மற்ற அணிகளிடமிருந்து போல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே இந்திய அணி எந்த இடத்திலும் கவனக்குறைவாக இல்லாமல் விளையாட வேண்டும்.

- Advertisement -

அதே சமயத்தில் குஜராத் அகமதாபாத் மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் தற்பொழுது இந்திய அணியில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்க முடியாது.

எனவே இதைக் கருத்தில் கொண்டு சுரேஷ் ரெய்னா இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “ஆஸ்திரேலியா அணியில் இடது கை வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா இரண்டு மூன்று ஓவர்கள் வீச வேண்டும். இல்லையென்றால் பும்ரா மற்றும் சமி இருவருக்கும் ஆரம்பத்திலேயே இரண்டு ஓவர்கள் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

ரோகித் நாளை இரண்டு ஓவர்கள் வீசினால் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் விளையாட தேவை இல்லை. கடந்த 16 மாதங்களாக சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒரு போட்டி சரியில்லை என்பதற்காக அவரை இறுதிப்போட்டியில் நிறுத்த முடியாது. இறுதிப்போட்டி அவருக்கானதாக கூட இருக்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!

Published by