சற்றுமுன்: கடைசி 2 போட்டிகளில் ரோகித் சர்மா இருப்பாரா? – வெளியானது அறிக்கை!!

0
654

காயத்தால் அவதிப்பட்டு வந்த ரோகித் சர்மா கடைசி இரண்டு போட்டிகளில் இருப்பாரா? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 19 ஓவர்களில் இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் இந்திய அணிக்கு துவங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்தபோது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் நடுவிலேயே ரிட்டயர் ஹட் மூலம் வெளியேறினார்.

- Advertisement -

ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது மற்றும் அடுத்தடுத்த போட்டிகளில் இவர் இடம் பெறுவாரா? என தொடர் கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வந்தன. 3வது போட்டியின் முடிவில் பேசிய ரோகித் சர்மா கூறுகையில்,

“நான்காவது போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நிச்சயம் குணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறேன். இதுவரை காயம் எந்த அளவிற்கு இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. அணியின் மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு இது குறித்த அறிக்கைகள் வெளியிடப்படும்.” என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி முழுவதும் இவரது உடல்நிலை குறித்த அப்டேட் வெளிவரவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ரோகித் சர்மா நிச்சயம் இருக்க மாட்டார் என பலரும் எண்ணி வந்தனர். மேலும் இந்த தொடருக்கு பிறகு ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதிலும் ரோகித் சர்மா விளையாட முடியுமா? முடியாதா? என்ற விவாதங்களும் நிலவி வந்தன. இறுதியாக ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை அணியில் உள்ள மருத்துவ குழுவினர் வெளியிட்டனர்.

- Advertisement -

குறைந்த அளவிலான காயமே ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்டு இருக்கிறது. 6ம் தேதி தான் அடுத்த போட்டி என்பதால் அதற்குள் ரோகித் சர்மா குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பி விடுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அணியினர் மற்றும் ரசிகர்கள் பலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் நான்காம் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றி விடும். இந்த சூழலில் ஐந்தாம் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் ஓய்வு அளிக்கப்படலாம். ஆசிய கோப்பை தொடரில் அவரால் நன்றாக விளையாட முடியும் என்றும், அதற்குள் கூடுதல் ஓய்வும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

காயம் குணமடைந்து விட்டாலும் கடைசி இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டாம் என்று அவரிடம் அணியின் மருத்துவர்கள் வற்புறுத்தியதாகவும் அதற்கு ரோகித் சர்மா முடியாது என்று மறுத்ததாகவும் இந்திய அணியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 உலக கோப்பை துவங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்னணி துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் அடிக்கடி காயம் காரணமாக அணியில் இருந்து வெளியில் இருப்பது கூடுதல் பின்னடைவை இந்திய அணிக்கு கொடுக்கலாம் என வல்லுநர்கள் பலர் கருத்துக்களை முன்வைத்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.