உங்க வீட்ல இருக்கவங்க அடிபட்டு கிடந்தா இப்படித்தான் செய்வீங்களா.. இது தான் ஊடக தர்மமா? – ரோகித் சர்மா மனைவி சரமாரி கேள்வி!

0
2636

நெட்டிசன்களே கொஞ்சம் நியாய தர்மம் வேணாமா? வீடியோக்களை பரப்புவது சரியல்ல என பேசியுள்ளார் ரோகித் சர்மாவின் மனைவி.

டிசம்பர் 30ம் தேதி டெல்லியில் இருந்து டேராடூன் அருகே உள்ள சொந்த ஊருக்கு காரில் வேகமாக சென்றுகொண்டிருந்த ரிஷப் பண்ட், அதிகாலை 5.10 மணியளவில் தூக்க கலக்கத்தில் நிலைதடுமாறி நடுவில் இருந்த டிவைடரில் மோதியதால் விபத்திற்கு உள்ளானார்.

உடனடியாக அந்த வழியாக பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் விரைந்து விபத்து ஏற்பட்ட கார் நோக்கி சென்று ரிஷப் பண்ட்டை காரிலிருந்து வெளியே எடுத்து ஓரமாக அமரவைத்து போர்வைகள் போர்த்தி உக்காரவைத்து, தண்ணீர் எல்லாம் கொடுத்து சாந்தப்படுத்தியுள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உறிய உதவிகளை செய்துள்ளனர்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் விபத்தானபோது அவர் நிலைதடுமாறி பாதி மயக்கத்தில் அருகில் இருந்தவர்களிடம் பேசியுள்ளார். அதன் வீடியோ சமூகவளைதளங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரத்தம் சிந்தும் புகைப்படம், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களும் பரவி வருகிறது.

இதனை கண்டித்து காட்டதுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் ரோகித் சர்மா மனைவி ரித்திகா. அவர் பதிவிட்டதாவது:

“ஒருவர் விபத்து ஏற்பட்டு நிலையான மனநிலையில் இல்லாமல், மிகுந்த காயத்துடன் இருக்கும்போது இப்படித்தான் அவருடைய வீடியோ, புகைப்படங்களை எடுத்து பரப்புவீர்களா?. இதனால் அவருடைய நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர் எவ்வளவு பாதிப்பார்கள் என்பது புரியாதா?. ஊடகங்கள் உங்களது வேலையை பார்க்கிறார்கள். ஆனால் உணர்வுபூர்வமான விஷயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அதையும் உணர்ந்து நடக்கவேண்டும் அல்லவா?” என காட்டமாக பேசியுள்ளார்.

Courtesy: Ritika sejdeh instagram story