டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக விராட் கோலியை முந்தி ரோஹித் சர்மா சாதனை!

0
255
Rohitsharma

பதினாறாவது ஐபிஎல் சீசனில் 16வது போட்டியாக இன்று டெல்லி மைதானத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதன்படி டெல்லிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிரிதிவிஷா வந்தார்கள்.

- Advertisement -

பிரித்திவிஷா 15 ரன், மனிஷ் பாண்டே 26 ரன், யாஸ் துல் 2 ரன், ரோமன் பவல் 4 ரன், லலித் யாதவ் 2 ரன் எடுத்து வெகு வேகமாக வெளியேறினார்கள். இதற்கடுத்து கேப்டன் டேவிட் வார்னர் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார்.

ஒரு முனையில் டேவிட் வார்னர் பெருமை காட்ட அக்சர் படேல் அதிரடியான ஆட்டத்தில் இறங்கி 25 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டேவிட் வார்னர் 47 பந்தில் 51 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. பெகரன்டாப் மூன்று ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து மும்பை அணிக்கு துவக்கம் தர கேப்டன் ரோஹித் சர்மா இஷான் கிஷான் இருவரும் களமிறங்கினார்கள். முகேஷ் குமார் வீசிய முதல் ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசி அசத்தினார்.

- Advertisement -

இந்த ரன்கள் மூலம் ரோஹித் சர்மா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு முதல் இடத்தில் விராட் கோலி இருந்தார். மூன்றாவது இடத்தில் ரகானே இருக்கிறார்.

டெல்லி அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த மூன்று வீரர்கள்.

ரோகித் சர்மா 937 ரன்கள்
விராட் கோலி 925 ரன்கள்
ரஹானே 792 ரன்கள்