உடைந்த விரலுடன் ரோகித் சர்மா போராட்டம் வீண்! – தொடரை இழந்தது இந்திய அணி!

0
2845
Ind vs Ban

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது இதில் டாசில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டி வைத்து தேர்வு செய்தது . ஆட்டத்தின் துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார் .

ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது . ஏழாவது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமதுல்லா மற்றும் மெஹதி ஹசன் இருவரும் சிறப்பாக ஆடி ஜோடியாக 148 ரன்கள் சேர்த்தனர் . முகமதுல்லா 77 ரன்களில் ஆட்டம் இழந்த பின் சிறப்பாக ஆடிய மெஹதி ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் . இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 271 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது .

- Advertisement -

272 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் தவான் களம் இறங்கினர் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி இபாதத் ஹுசைன் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார் . அதற்கு அடுத்த ஓவரிலேயே ஷிகர் தவானும் முஸ்தபிஷேர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் . கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆட முடியாததால் நான்காவது இடத்தில் களம் இறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தரும் 11 எண்கள் எடுத்திருந்த நிலையில் ஷாகிப் பந்துவீச்சில் அவுட்டானார் . இவரைத் தொடர்ந்து துணை கேப்டன் கே எல் ராகுல் 14 ரண்களில் மெஹதி பந்திவீச்சில் ஆட்டம் இழந்தார் .

65 ரண்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடினர் இவர்கள் இருவரும் களத்தில் இருக்கும் பொழுது இந்திய அணி வெற்றி பெறுவது போல் இருந்தது . அணியின் எண்ணிக்கை 172 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் 82 எண்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்ஷர் பட்டேல் 56 ரண்களில் ஆட்டம் இழந்தார் .

இதனால் இந்தியா அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது அப்போது காயம் காரணமாக வெளியேறிய கேப்டன் ரோஹித் சர்மா காயத்தையும் பொருட்படுத்தாமல் அதிரடியாக அடி அணியின் வெற்றிக்கு போராடினார் இரண்டு பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையில் இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ரோகித் இறுதிப்பந்தை மிஸ் செய்தார் இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . இறுதியில் போராடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 51 எண்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் .

- Advertisement -