சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. மீண்டும் பயிற்சியில் ரோகித்.. காத்திருக்கும் 2 பெரிய தொடர்

0
312

தோனிக்கு பிறகு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தரும் ரட்சகன் கேப்டன் ரோகித் சர்மா என்று ரசிகர்கள் நம்பினர்.அதற்கு ஏதுவாக அவர் தொடர்ந்து டி20 தொடர்களை வென்று குவித்தார். ஆனால் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர் ஆகியவற்றை ரோகித் இழந்தார். மேலும் ரோகித்தின் உடல் தகுதியும் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

- Advertisement -

வங்கதேச தொடரில் விளையாடிய போது கைவிரலில் காயம் ஏற்பட்டு தொடரை விட்டு பாதியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இலங்கை தொடருக்கு ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித்  திரும்பி உள்ளார். இதன் காரணமாக மும்பையில் ரோகித் சர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ரோகித் சர்மா முன் தற்போது இரண்டு பெரிய தொடர்கள் காத்திருக்கிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர் முக்கியத்துவம் இல்லாத தொடராக தான் கருதப்படுகிறது.

உலககோப்பைக்காக இந்திய அணியை தயார் செய்ய இது ஒரு ஆரம்ப கட்டமாக இருக்கும். ஆனால் ரோகித் சர்மாக்கு இருக்கும் முக்கிய தலைவலியை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்டை வெல்ல வேண்டும் என்பது தான்.இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.இந்த தொடர் முடிந்த உடனே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.  அதிலும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தமது தலைமையை நிரூபிக்க வேண்டும்.

அதன் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அதில் வெற்றி பெற  வேண்டும். இப்படி அடுத்தடுத்து பெரிய சவால்களை நோக்கி ரோஹித் சர்மா காத்திருக்கிறார். தனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள ரோகித் சர்மா எதிர்பார்க்கிறார். இதற்காகத்தான் ஓய்வு நேரத்தில் கூட தனது உடற்பயிற்சியில்  கவனம் செலுத்தி வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல வீரர்கள் வெளி நாட்டில் உள்ள நிலையில், ரோகித் சர்மா மட்டும் கோதாவில் இறங்கி பட்டையை கிளப்பி வருகிறார்.

- Advertisement -