ரவி அஷ்வின் குறித்து ரோஹித் ஷர்மா வாய் தவறி அவ்வாறு கூறி இருக்கிறார் – பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் ரஷீத் லத்தீப்

0
117
Ravichandran Ashwin and Rohit Sharma

இந்திய ஸ்பின் பந்து வீச்சாளர்கள் மத்தியில் அனில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்குப் பின்னர் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகளை கைப்பற்றிய கபில்தேவ் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

சமீபத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா முதல்முறையாக இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கினார். போட்டியின் முடிவில் இந்திய அணி 222 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் மொத்தமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

6 விக்கெட்டுகளை கைப்பற்றி அதன்மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் 85 போட்டிகளில் மொத்தமாக 436 விக்கெட்டுகளை கைப்பற்றி கபில் தேவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த சாதனையை செய்த ரவிச்சந்திரன் அஸ்வினை புகழ்ந்த கேப்டன் ரோஹித் “அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்பின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று புகழ்ந்து கூறி இருந்தார்”.

வாய் தவறி அவ்வாறு ரோஹித் ஷர்மா கூறியிருக்கிறார்

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஸ்பின் பந்து வீச்சாளர் ரஷீத் லத்தீப் தற்பொழுது ரோகித் கூறியது தனக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளார்.”ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவரிடம் அனைத்து வகையான வேரியேஷன் உள்ளது. இருப்பினும் அவர் இந்திய மண்ணில் விளையாடுவது போல ஓவர்சீசில் அவ்வளவு சிறப்பாக விளையாடுவதில்லை.

ஆனால் ஓவர்சீசில் (இந்தியாவைத் தவிர்த்து வெளிநாட்டு மண்ணில்) கபில்தேவ் மிக சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். தற்பொழுது உள்ள இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா கூட மிக சிறப்பாக பந்து வீசுவார் என்றும் முன்னாள் இந்திய அணி வீரரான பிஷன் சிங் பேடி கூட அற்புதமாக பந்து வீசி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் மட்டும் என்றால் ரோஹித் ஷர்மா கூறியது மிக சரி அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து காலத்திற்கும் ஏற்ற சிறந்த பந்துவீச்சாளர் என்று கூறியிருந்தால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரோஹித் வாய்தவறி அவ்வாறு அவர் கூறியிருக்கிறார். எனினும் இது வீரர்களை ஊக்குவிக்கும் ஒரு வழியாகும் என்று ரஷீத் லத்தீப் கூறியிருக்கிறார்.

85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றியிருக்கிறார். அதேபோல லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை இந்திய அணிக்காக 164 போட்டிகளில் விளையாடி 212 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது