இந்த வேகப்பந்து வீச்சாளருக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் – முன்னாள் வீரர் இர்பான் பதான் வேண்டுகோள்

0
301
Rohit Sharma and Irfan Pathan

கடந்த நவம்பர் மாதம் முதல் இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மா நிரந்தர பொறுப்பு ஏற்றார். அவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடர், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர், சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்துள்ள டி20 தொடர் என அனைத்திலும் இந்திய அணி எதிரணியை ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி கொண்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சீனியர் வீரர்களில் ஒரு சிலர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது எனவே அவர்களுக்கு பதிலாக நிறைய இளம் வீரர்கள் நடந்து முடிந்து தொடர்களில் களமிறங்கி விளையாடினார்கள். வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார் தீபக் சஹர் மற்றும் தாகூர் ஆகியோருடன் இணைந்து இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹர்ஷால் பட்டெல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ள ஆவேஷ் கான்

நடந்து முடிந்துள்ள தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் இந்திய அணிக்கு முதல் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எந்தவித விக்கெட்டையும் கைப்பற்றினர் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து சுமாராக பந்து வீசி அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றொரு வாய்ப்பினை வழங்கி இருக்கின்றனர். அந்த வாய்ப்பை சரியாக இரண்டாவது போட்டியில் ஆவேஷ் பயன்படுத்திக் கொண்டதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் தற்பொழுது கூறியுள்ளார்.

அதற்கான வாய்ப்பை தொடர்ந்து அளித்தாக வேண்டும்

மேலும் பேசிய அவர் ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது கிரிக்கெட் கேரியரில் நல்ல நாட்களை விட மோசமான நாட்கள் தான் நிறைய கிடைக்கப் பெறும். அந்த நாட்களில் அவருக்கு டீம் மேனேஜ்மென்ட் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். உதாரணத்திற்கு விராட் கோலி முகமது சிராஜ் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கான வாய்ப்பை அவர் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருந்தார். அதன் காரணமாகவே இன்று முகம்மது சிராஜ் ஒரு சிறப்பான பந்து வீச்சாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

எனவே அதே போன்று தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் மற்றும் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஆவேஷ் கான் மீது நம்பிக்கை வைத்து அவர் காண வாய்ப்பை தொடர்ந்து அளித்து வரவேண்டும். இந்திய அணிக்கு ஒரு தலை சிறந்த பந்துவீச்சாளராக உருமாறும் தன்மை அவரிடம் இருக்கிறது. எனவே அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ள ஆவேஷ் கான்

பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களை கேப்டு வீரர்கள் என்று அழைப்பார்கள். அதைப் போன்று சர்வதேச அளவில் இந்திய அணிக்கு எந்தவித போட்டியிலும் விளையாடாமல் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரர்களை அன் கேப்படு வீரர்கள் என்று அழைப்பார்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆவேஷ் கான் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெற்று விளையாடுவதற்கு முன்பாகவே நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு லக்னோ அணிக்கு அவர் ஏலம் போயிருக்கிறார். அன் கேப்டு வீரரை இவ்வளவு தொகை கொடுத்து இதுவரை எந்த ஒரு அணியும் வாங்கியதில்லை. எனவே அவர் மீதான எதிர்பார்ப்பு தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெருமளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.