இனி இந்திய அணியில் ஜடேஜாவுக்கு இந்த சலுகை எப்போதும் வழங்கப்படும் – கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதி

0
5443
Ravindra Jadeja and Rohit Sharma

இந்திய அணி தற்போது எனக்கு அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக இந்த தொடர் நடைபெற்று வருகிறது. கோலி, பண்ட், சூரியகுமார் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களம் கண்டுள்ளது. அதேபோல இலங்கை அணியும் ஹசரங்கா, ராஜபக்ஷா, தீக்ஷனா போன்ற வீரர்கள் இல்லாமல் விளையாட வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு பயிற்சி எடுக்கும் ஆட்டமாக இந்திய அணி நிறைய வீரர்களை முயற்சி செய்து பார்த்து வருகிறது. ருத்ராஜ், சாம்சன், ஹூடா போன்ற பல வீரர்கள் இந்த தொடரில் இடம் பிடித்துள்ளனர்.

தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் ஆட அழைத்தது. இந்திய அணிக்கு கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் இணைந்து துவக்கம் கொடுத்தனர். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாத கிஷன் இந்த முறை சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். ரோகித் 44 ரன்களும் அதன் பின்பு வந்த ஸ்ரேயாஸ் 57 ரன்களும் எடுக்க இந்திய அணி 199 ரன்கள் குவித்தது. எப்போதும் கீழ் வரிசையில் களமிறங்கும் ஜடேஜா இந்த முறை 4-வது வீரராக பேட்டிங் ஆட வந்தார். அதிக பந்துகள் கிடைக்காததால் 3 ரன்கள் மட்டுமே இவரால் எடுக்க முடிந்தது.

- Advertisement -

சமீபகாலமாகவே இவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் கூட அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சக இந்திய வீரரான ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாகவே இவருக்கு பேட்டிங் விளையாட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. தற்போது அதற்கேற்ப இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இனி ஜடேஜா அதிக முறை மேல் வரிசையில் பேட்டிங் ஆடுவதைக் காணலாம் என்று கூறியுள்ளார். அவரை மேல் வரிசையில் ஆடவைப்பது குறித்து அதிகம் யோசித்து வருகிறோம் என்றும் அவர் பேசியுள்ளார். பந்துவீச்சில் இதுவரை இந்திய அணிக்காக சிறப்பாக அசத்தியுள்ள ஜடேஜா, இனி பேட்டிங்கிலும் கலக்கப் போகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை கூறி வருகின்றனர்.