கேப்டனாக விராட் கோலி படைத்த சாதனையை முறியடித்துள்ள புதிய கேப்டன் ரோஹித் ஷர்மா !

0
121
Virat Kohli and Rohit Sharma

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எஞ்யிருந்த கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. கேப்டன் ரோஹித் ஷர்மா, கொரோனா தொற்றால் வெளியேறினார். பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் 4 நாட்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் பிரண்டன் மெக்கல்லம் தலையிலான புதிய இங்கிலாந்து அணி கடைசி நாளில் அதிரடியாக ஆடி வெற்றியை பறித்துக்கொண்டது. டெஸ்ட் தொடர் 2-2 என டிராவில் முடிந்தது. தற்போது அனைவரது கவனமும் டி20ஐ தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா முழுவதுமாக குணமாகி முதல் டி20ஐ போட்டிக்கு தாயாராகினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இரு மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் களமிறங்கினார். அமர்களமாக ஆரம்பித்த ரோஹித் ஷர்மா 14 பந்தில் 5 பவுண்டரிகள் விளாசி மொத்தம் 24 ரன்கள் சேர்த்தப் பின்னர் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் கேப்டனாக 1000 ரன்களைக் கடந்து விராட் கோலியின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

- Advertisement -
சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு விரைவாக 1000 ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியல்

பாபர் அசாம் – 26 இன்னிங்ஸ்
ரோஹித் ஷர்மா – 30 இன்னிங்ஸ் *
விராட் கோலி – 29 இன்னிங்ஸ்
பாப் டு பிளசில் – 31 இன்னிங்ஸ்
ஆரோன்‌ பின்ச் – 32 இன்னிங்ஸ்
கேன் வில்லியம்சன் – 36 இன்னிங்ஸ்

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தப் பின் அவரது சக வீரர் இஷான் கிஷன் 8 ரன்னில் நடையைக் கட்டினார். வந்த வேகத்திலேயே 2 சிக்ஸர்கள் விளாசிய தீபக் ஹூடா மல மலவென பவுண்டரிகள் விளாசி 17 பந்தில் 33 ரன்கள் அடித்துவிட்டு வெளியேறினார். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் & ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் ஆடி அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். 19 பந்தில் விரைவாக 39 ரன்கள் சேர்த்துவிட்டு ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். மறுபக்கம் பாண்டியா அரை சதம் அடித்தப் பின் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவரில் 2 பவுண்டரி விளாசிய அடுத்தப் பந்திலையே தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆகினார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மொயின் அலி, ஜோர்டான் 2 விக்கெட்டுகளும் டாப்லி, மில்ஸ் மற்றும் பார்க்கின்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -