2வது டெஸ்டுக்கு ஆஜராகிறாரா ரோகித் சர்மா? மருத்துவ குழுவினர் தீவிர ஆலோசனை – சற்றுமுன் வெளியான ரிப்போர்ட்!

0
1625

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா இருப்பார் என்று தகவல்கள் வருகின்றன.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால், ரோகித் சர்மாவால் வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை. காயம் இன்னும் குணமடையாமல் இருந்ததால் முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு, மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் உள்ளே வந்தார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முடித்த பிறகு, இந்திய அணி 254 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணிக்கு சுப்மன் கில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். கேப்டன் கேஎல் ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளார்.

சற்றுமுன் வந்த தகவலின் படி, ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இருப்பார் என்று தெரிய வந்திருக்கிறது. இது பற்றி அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாவது: மும்பைக்கு சென்ற ரோகித் சர்மா மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது உடல்நிலை தேறி வரும் அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாக இந்திய அணி நிர்வாகத்திடமும் அணியின் மருத்துவ குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா விரைவில் வங்கதேசம் வந்து மருத்துவ குழுவினரிடம் பரிசோதனை மேற்கொள்கிறார். அதன்பின் விளையாட தகுதியாக இருக்கிறாரா என்பது பற்றி கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிய வந்திருக்கிறது.

அதிகபட்சம் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இந்த தொடர் முடிவுற்ற பிறகு, இந்திய அணி நேரடியாக ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டெஸ்டில் ரோகித் சர்மா போதிய அளவு பயிற்சி இல்லாததால் நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று, அதை பயிற்சி ஆட்டமாக எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியா தொடருக்காக தயாராவார் எனவும் தகவல்கள் வருகிறது.