மிகப்பெரிய சாதனையை படைப்பாரா ரோகித் சர்மா? இன்னைக்கு போட்டில இதைமட்டும் செய்தால் போதும்!!

0
725

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் மிகப்பெரிய சாதனையை இந்திய அணி படைக்கும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிய பிறகு, டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியை இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க இருக்கிறது. 

இந்நிலையில் 2வது டி20 போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 15வது டி20 வெற்றியை இந்திய அணி பெறும். மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக டி20 போட்டிகளில் வென்ற மற்றுமொரு அணி என்ற சாதனையை சமன் செய்யும். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய 21 போட்டிகளில், பாகிஸ்தான் அணி 15 வெற்றிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று, இந்த சாதனையை சமன் செய்யும். இதற்கு அடுத்ததாக இன்னும் மூன்று டி20 போட்டிகள் இருப்பதால் அதிலும் இந்திய அணி வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக டி20 போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியலில், இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 17 டி20 போட்டிகளில் வென்றிருக்கிறது. இதுவே இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக, பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 16 டி20 போட்டிகளிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 15 டி20 போட்டிகளிலும் வென்றுள்ளது இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகபட்சமாக இருக்கிறது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றியை பெறும் பட்சத்தில், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கலாம். பாகிஸ்தான் அணியின் சாதனையையும் சமன் செய்யலாம். மீதமுள்ள அனைத்து டி20 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் 18 டி20 வெற்றிகளுடன், தனிப்பட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் என்கிற சாதனையையும் படைக்கலாம்.

இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் வார்னர் பார்க் மைதானத்தில் இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணி 8 டி20 போட்டிகளில் விளையாட்டி உள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியிருக்கிறது. அதுவும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிகழ்ந்தது. அதன் பிறகு இந்த மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியது இல்லை. ஆகையால் முதல் போட்டியில் இழந்த வெற்றியை இந்த போட்டியில் மீட்பதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி முழு மூச்சில் களமிறங்கலாம்.