ரிக்கி பாண்டிங் நாட்டிலும் சம்பவம் செய்தவர்தான் ரோஹித் சர்மா – இர்பான் பதான் சுவாரசிய கருத்து!

0
629
Irfan Pathan

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி உடன் உள்நாட்டில் மோதி 3 போட்டிகளையும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது!

இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் துவக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்!

- Advertisement -

இந்தச் சதம் அவருக்கு முப்பதாவது ஒரு நாள் சதமாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங் சத சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.

இது மட்டும் அல்லாமல் ரோகித் சர்மாவுக்கு ஆயிரம் நாட்கள் கடந்து ஒரு நாள் போட்டியில் இந்த சதம் வந்துள்ளது. ஆனால் அவர் இந்த ஆயிரம் நாட்களில் மொத்தம் விளையாடிய ஒரு நாள் போட்டிகள் 17 மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வேதப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் ” அவர் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கியதில் இருந்து, இந்திய பேட்டிங் முழு கட்டுப்பாட்டையும் தன் வசம் எடுத்து இருக்கிறார். சீரான சராசரியிலோ அல்லது அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டிலோ தொடர்ந்து ரன் குவிப்பதிலோ அவர் இதைச் செய்து வந்து கொண்டே இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சதம் வந்துள்ளது. மேலும் ஒரு நாள் போட்டியில் அவருக்கு பத்தாயிரம் ரண்களும் வரும்!” என்று தெரிவித்துள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஒருநாள் போட்டிகளில் அவர் ரிக்கி பாண்டிங் 30ஆவது சதத்தை சமன் செய்து உள்ளார். ரிக்கி பாண்டிங் இன் நாட்டில் கூட அவரது பேட்டிங் சராசரி 53. இங்கிலாந்தில் அவரது சராசரி 64. மேலும் அவர் அங்கு 5 சதங்கள் அடித்துள்ளார். அவர் எல்லா இடங்களிலும் ரன்கள் அடித்துள்ளார் மேலும் இந்தியாவிலும் அவர் ரன் குவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம் என்று பாராட்டி பேசி இருக்கிறார்!