உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு அந்தரத்தில் தொங்குது.. நம்ம கேப்டன் ரோகித் என்ன செய்றாரு பாருங்க?

0
271

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி ஒரு முறை கூட icc கோப்பையை வெல்லவில்லை என்ற காரணத்தினால் தான் அவர் அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது ஒரு ஆண்டுக்கு மேலாக கேப்டன் பதவியில் உள்ள ரோகித் சர்மாவும் ஐசிசி t20 உலக கோப்பை தொடரில் அரை இறுதிவரை மட்டுமே சென்று நடையை கட்டினார்.

- Advertisement -

இதனால் ரோகித் சர்மாவுக்கும் தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மாவும் இரண்டு பெரிய வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதில் தற்போது முதலில் வருவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகும். பைனலுக்கு செல்ல இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆக வேண்டும்.

அப்படி தோற்றால் கூட இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வது மற்ற அணிகளின் கைக்குச் சென்று விடும். இதனால் அகமதாபாத் டெஸ்டில் இந்திய அணி கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.இதற்காக இந்திய அணி  தீவிரப் பயிற்சி செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அனைவரும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். விராட் கோலி தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் .இந்திய அணியைவழி நடத்த வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் தான் ரசிகர்களின் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் விளம்பரத்திற்காக ரோஹித் சர்மா மும்பையில் ஸ்டுடியோ ஒன்றில் தனது நேரத்தை செலவிட்டு உள்ளார். அங்கு ஐபிஎல் விளம்பரத்திற்கான படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று ரோகித் சர்மா நடித்து வருகிறார். இந்த செய்தியை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்தூர் டெஸ்ட் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் கூடுதலாக இரண்டு நாட்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. தற்போது அடுத்த போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறும் நிலையில் இந்திய அணி வீரர்கள் அகமதாபாத்துக்கு முன்கூட்டியே சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என ரசிகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்படி பயிற்சி செய்யவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்திருக்கலாம். ஆனால் ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்காக கேப்டன் ரோகித் சர்மா இவ்வாறு செய்திருப்பது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது. அகமதாபாத் ஆடுகளத்தை பொறுத்தவரை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படாது என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கு இங்கிலாந்துடன் விளையாடி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.