இந்திய ரசிகர்களுக்கு நற்செயதி.. செமி-பைனல் பிளேயிங் லெவனில் அவர் இருக்கிறார்!

0
40975

ரோகித் சர்மாவின் காயம் தீவிரமாக இல்லை, செமி-பைனலுக்குள் குணமடைந்து விடும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துவிட்டனர்.

டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டி வருகிற 9 மற்றும் 10ம் தேதி நடைபெறுகிறது. இன்று(9ம் தேதி) நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னி மைதானத்திலும், 10ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்திலும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன.

- Advertisement -

இந்திய அணிக்கு போட்டி 10ம் தேதி என்பதால், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்து அணியும் அடிலெய்டு மைதானத்தின் மற்றொருபுறம் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

நேற்று இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கேப்டன் ரோகித் சர்மாவின் கையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயிற்சியின் பாதியிலேயே வெளியேறினார். சிறிது நேரம் ஐஸ் கட்டி வைத்து வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார்.

இவரின் காயம் குறித்த அறிக்கை 9ம் தேதி வெளியிடப்படும் என்று அணியின் மருத்துவக்குழுவால் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதனையடுத்து, இன்று வெளியான அறிக்கையில், ரோகித் சர்மா கையில் ஏற்பட்டிருக்கும் காயத்தால் எலும்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், வெறுமனே வீக்கம் மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போட்டிக்கு முன்பு காயம் எளிதாக குணமடைந்து விடும் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருந்து அணியை வழிநடத்துவார் என்று தெரியவந்துள்ளது.