ரோகித் சர்மா சிக்சரில் சாதனை; விராட் கோலி சூர்யகுமார் யாதவ் அபாரம்!

0
529
ICT

இந்திய அணி 8வது டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ரோகித்சர்மா முதலில் பேட்டிங் செய்வதெனத் தீர்மானித்தார். பாகிஸ்தான் அணியுடன் கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியை இந்த போட்டியிலும் விளையாடுகிறது.

- Advertisement -

துவக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் அவுட் இல்லாத பந்துக்கு அப்பில் செய்யாமல் 9 ரன்களில் வெளியேறினார். இதற்கடுத்து ரோகித் சர்மா விராட் கோலி கூட்டணி அமைத்து பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரோஹித் சர்மா மூணு ஒன்பது பந்துகளில் 53 ரன்களை 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து விராட் கோலியுடன் சூரியகுமார் ஜோடி சேர வழக்கம் போல் ரன் எகிற ஆரம்பித்தது. விராட் கோலி இந்த தொடரில் இரண்டாவது அரைசதம் எடுத்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்களை 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய சூரியகுமார் கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடக்கம். இந்த ஜோடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி 2014 மற்றும் 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை மூன்றுமுறை விளாசி இருக்கிறார். தற்பொழுது இந்த உலகக் கோப்பையிலும் அடுத்தடுத்து இரண்டு அரை சதங்கள் விளாசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ரோகித் சர்மா மொத்தம் 34 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 63 சிக்சர்கள் விளாசி யாரும் தொட முடியாத உயரத்தில் முதலிடத்தில் இருக்கிறார்.