போன மேட்ச் மிஸ் ஆகிடுச்சு, இம்முறை மிஸ் ஆகாது; சொல்லியடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா!

0
259

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 14 ரன்கள் அடித்தபோது, ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் எட்டியுள்ளார் ரோகித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து முடிந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

இதை பின்தொடர்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் 19.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகள் தோல்வியை தழுவி ஆரம்பித்திருந்தாலும் அடுத்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் நல்ல முன்னேற்றமும் கண்டிருக்கிறது.

ரோகித் சர்மா ரெக்கார்ட்:

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டிக்கு முன்பு, ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் 5966 ரன்கள் அடித்திருந்தார். கொல்கத்தா அணியுடன் 34 ரன்கள் அடித்த 6000 ரன்கள் மைல்கல்லை எட்டுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. துரதிஷ்டவசமாக 20 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார்.

அடுத்ததாக நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் கடந்த போது, தனது 232ஆவது ஐபிஎல்போட்டியில் 6000 ரன்களை கடந்து இருக்கிறார் ரோகித் சர்மா. இதற்கு முன்பு டேவிட் வார்னர், விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

ரோகித் சர்மா நான்காவது வீரர் என்ற வரலாற்றை பதிவு செய்தார் மற்றும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்

  1. விராட் கோலி – 226 போட்டிகள் – 6844 ரன்கள்
  2. ஷிகர் தவான் – 210 போட்டிகள் – 6477 ரன்கள்
  3. டேவிட் வார்னர் – 167 போட்டிகள் – 6109 ரன்கள்
  4. ரோகித் சர்மா – 232 போட்டிகள் – 6104 ரன்கள்
  5. சுரேஷ் ரெய்னா 205 போட்டிகள் – 5528 ரன்கள்