சர்வதேச கிரிக்கெட்டில் 17000 ரன்கள், இதை செய்துகாட்டிய 6வது இந்திய வீரர் – வரலாறு படைத்த ரோகித் சர்மா!

0
197

சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்கள் மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்திருக்கிறார் ரோகித் சர்மா. இதைச் செய்து காட்டிய ஆறாவது இந்திய வீரர் ஆவார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து 480 ரன்கள் அடித்தது. அதன்பிறகு இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 21 ரன்கள் எட்டியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 17,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். ரோகித் சர்மா தனது 438வது சர்வதேச இன்னிங்சில் இதனை செய்திருக்கிறார்.

2007ஆம் ஆண்டு சர்வதேச இந்திய அணிக்கு அறிமுகமாகின ரோகித் சர்மா, இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதில் 9782 ரன்களை ஒருநாள் போட்டிகளிலும், 3853 ரன்களை டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 3350 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் ஐபிஎல் தொடர் அல்லாமல், சர்வதேச போட்டிகளில் மட்டுமே அடிக்கப்பட்டவை.

- Advertisement -

இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி ஒரு பார்வை..

நான்காவது டெஸ்ட் போட்டியை பொருத்தவரை ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்த பிறகு, முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது.

துரதிஷ்டவசமாக கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதைத்தொடர்ந்து உள்ளே வந்த புஜாரா துவக்க வீரர் கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார். உணவு இடைவேளைக்கு முன்பு, அரைசதம் கடந்த கில் 65 ரன்களிலும், புஜாரா 22 ரன்களிலும் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்துள்ளது. தற்போது வரை 351 ரன்கள் பின்தங்கியுள்ளது.