இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனில் நானும் தவானும் வெளியே தான் செல்ல வேண்டும் ; தவான், ராகுலுக்கு பதில் களமிறங்கும் ஓப்பனர் இவர்தான் – ரோஹித் உறுதி

0
2555
Rohit Sharma

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்திய முறைப்படி மதியம் 1:30 மணி அளவில் ஆரம்பமாகும் அந்த போட்டியை காண அனைத்து ரசிகர்களும் மிக ஆவலாக உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் நிச்சயம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி வெற்றிபெற கடுமையாக போராடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

நாளை நடைபெற இருக்கின்ற ஆட்டத்தில் ரோஹித்துடன் இணைந்து ஓபனிங் விளையாட போகும் வீரர்

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் நாளை அவருடன் இணைந்து ஓபனிங் விளையாட போகின்ற வீரர் யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஷிகர் தவான்,ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மறுபக்கம் மயங்க் அகர்வாலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ள காரணத்தினால் இந்த கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.

அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ரோஹித் ஷர்மா நாளை நடைபெற இருக்கின்ற முதல் ஆட்டத்தில் தன்னுடன் இணைந்து இஷான் கிஷன் ஓபனிங் விளையாடப் போகிறார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த ஜோடி இணைந்து விளையாடியதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே நாளைய ஆட்டத்திலும் சிறந்த துவக்கத்தை இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அனைவரும் ஒரே கருத்தை முன் எடுத்து வைக்க அதற்கும் ரோஹித் பதிலளித்துள்ளார். நீங்கள் கூறும் கருத்துப்படி இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் ஆகியோரை ஓபனிங் விளையாட வைக்கலாம், நானும் ஷிகர் தவானும் பெஞ்சில் உட்கார்ந்து கொள்கிறோம் என்று சற்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் நிச்சயமாக அவர்கள் இருவரும் இணைந்து வருங்காலத்தில் இந்திய அணிக்கு ஓபனிங் வரிசையில் விளையாடுவார்கள். அதற்கான நேரம் இன்னும் இருக்கிறது என்றும், அதுவரை சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.