விராட் கோலியை தூக்கி கொண்டாடிய ரோகித் சர்மா – வீடியோ இணைப்பு!

0
1000
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பையில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி ஒரு உயர் அழுத்த போட்டியாகவும், பல திருப்பங்களை கொண்ட போட்டியாகவும், ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் போட்டியாகவும் அமைந்தது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்ய வந்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பாபர் மற்றும் ரிஸ்வான் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். இதற்கடுத்து ஷான் மசூத் மற்றும் இப்திகார் அரைசதம் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா சீக்கிரத்தில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

புது முடிவாக போட்டியில் ஒரு திருப்பத்தை உண்டாக்க அக்சர் படேலை முன்கூட்டி களமிறக்க, அவர் தேவையே இல்லாமல் ரன் அவுட் ஆகி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயத்தில் தீயை வளர்த்தார்.

ஆனால் இதற்கு அடுத்து விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்தது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டுவந்து, ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்தாலும், விராட் கோலி கடைசி வரை நின்று இந்திய அணியை திரில் வெற்றி பெற வைத்தார்.

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவி இருக்க, இந்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு பாகிஸ்தான் அணியுடனான இந்த ஆட்டம் கேப்டனாக மிகவும் முக்கிய ஆட்டம். இந்த நிலையில் கைவிட்டுப்போன ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டுவந்த விராட் கோலியை அவர் மைதானத்திற்குள் ஓடி வந்து தூக்கி வைத்துக் கொண்டாடினார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!