“ரோகித் சர்மா விளையாடுறது எதிர்ல நின்னு பார்த்துகிட்டே இருக்கலாம்” – விராட் கோலி மனம் திறந்த பேச்சு!

0
374
Viratkohli

தற்காலத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருந்தாலும், சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் இருக்கின்ற தீவிரம் அதில் எப்பொழுதும் இருக்காது.

இன்று சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது!

- Advertisement -

ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி நான்கு கட்டமாக இங்கிலாந்து சென்று தனது பயிற்சியைத் தொடங்கியது. இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி அணிக்கு முன்கூட்டியே விளையாட சென்று விட்டார்.

ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மட்டுமே ஐபிஎல் தொடரில் இந்தமுறை அதிக காலம் விளையாடினார். ஸ்மித் லபுசேன் ஆகிய சில வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டிகளில் விளையாடினார்கள்.

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்று துவங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பற்றிய எதிர்பார்ப்பு எக்கச்சக்க அளவில் நிலவுகிறது.

- Advertisement -

இந்த சமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில விஷயங்களை மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இதுகுறித்து விராட் கோலி பேசும் பொழுது ” பேட்டிங்கில் ரோகித்துக்கு எப்பொழுதும் யாரையும் விட அதிக டைம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம் அவரது குணாதிசயத்தைக் காட்டியது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க இடத்தில் விளையாடுவது கடினமானது. அவர் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக அவர் விளையாடும் பொழுது எதிர் முனையிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டத்தில் தாக்கத்தைத் தரக்கூடிய வீரர். அவர் விளையாட ஆரம்பிக்கும் பொழுது உங்களிடமிருந்து ஆட்டத்தை அப்படியே எடுத்து விடுவார்.

யாராவது அவரை உடனடியாக ஆட்டமிழக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் சீக்கிரத்தில் அவர் தொடர்ந்து உங்களைக் காயப்படுத்த ஆரம்பிப்பார். அவர் ஆபத்தான வீரர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்!” என்று கூறியிருக்கிறார்!