அரங்கம் அதிர சிக்ஸர் அடித்து தனது முதல் ஓவர்சிஸ் சதத்தை விளாசினார் ரோகித் ஷர்மா

0
215
Virat Kohli and Rohit Sharma

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4-வது டெஸ்ட்டை ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்த டெஸ்ட்டை வெல்லும் அணி தொடர்ந்து முன்னிலை பெறும் என்பதால் இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்சில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்சில் வேகமாக அவுட் ஆகிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் இந்த முறை சிறப்பாக ஆடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று பல விமர்சகர்கள் இவர் மீது விமர்சனத்தை தூக்கி ஒரு காலத்தில் எறிந்தாலும், அது எல்லாம் பொய்யாகும் படியாக இந்த தொடரில் இவரது ஆட்டம் இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் எண்பது ரன்களுக்கு மேல் குவித்தும் சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.

இதுவரை ஒருமுறை கூட இந்தியாவிற்கு வெளியே சதம் அடிக்காதவர் ரோகித். இதனால் ரோகித் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக ஆடுவார் வெளிநாட்டு தொடர்களில் ஆட மாட்டார் என்ற ஒரு பேச்சு பரவலாக இருந்து வந்தது. ஆனால் அதையெல்லாம் இந்த முறை ரோகித் சர்மா பொய்யாக்கி விட்டார். மூன்றாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வந்த இவர் சரியாக தேனீர் இடைவேளைக்கு முன்பு சதம் கடந்தார்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலியின் பந்தில் இறங்கி வந்து சிக்சர் அடித்து சதம் கடந்தார் ரோகித். அதுவும் சதத்திற்கு சரியாக ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடித்து சதம் கடந்து ரசிகர்களுக்கு பெருத்த சந்தோஷத்தை கொடுத்தது.

ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் இன்னமும் 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையிலேயே இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. ஆகையால் எப்படியும் இந்த ஆட்டத்தை இனி தோற்க மாட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சில் கேப்டன் விராட் கோலி மிகவும் மகிழ்ச்சியாக எழுந்து நின்று கைதட்டி ரோகித்தின் சதத்தை கொண்டாடினார். சதம் அடித்தாலே அதை இரட்டை கதமாக மாற்றும் வழக்கம் கொண்ட ரோகித் சர்மா இந்த முறையும் அதை செய்வாரா என்று ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.