முக்கிய வீரர் அணியில் இல்லை; இப்போ தவான், ரோகித் சர்மா நிம்மதியா இருப்பாங்க – தினேஷ் கார்த்திக் பேட்டி!

0
1626

வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இல்லாததால், இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள் என தினேஷ் கார்த்திக்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி வருகிற டிசம்பர் 4ம் தேதி முதல் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன் பின்னர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே வங்கதேசம் சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஒரு நாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த தமிம் இக்பால் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். ஆகையால் லிட்டன் தாஸ் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார்.

அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இவை இரண்டும் வங்கதேச அணிக்கு சற்று பின்னடைவை தந்திருக்கிறது. தஸ்கின் இல்லாதது சிக்கலை தந்திருந்தாலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிகூர் ரஹ்மான் இருக்கிறார்.

இந்நிலையில் தஸ்கின் அகமது ஒருநாள் தொடரில் இல்லாததால், இந்திய துவக்க வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

- Advertisement -

“தஸ்கின் அகமது அச்சுறுத்தலை ஏற்படுத்தி விக்கெட் வீழ்த்தக்கூடிய பவுலர். டி20 உலக கோப்பையில் அதீத தாக்கத்தை ஏற்படுத்தினார். முஸ்தஃபிகூர் ரஹ்மான் இருக்கிறார். ஆனாலும் அவரைவிட தஸ்கின் அகமது கூடுதல் அழுத்தத்தை பேட்ஸ்மன்களுக்கு கொடுப்பார். இதன் காரணமாக வங்கதேசம் அணிக்கு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழும்.

அப்படிப்பட்ட பவுலர் காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு சறுக்கலாக தெரிகிறது. அதேநேரம் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சிகர் தவான் இருவரும் சற்று நிம்மதியாக உணர்வார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பை எதை வைத்து சரி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.” என தனது கருத்தினை பதிவு செய்திருந்தால் தினேஷ் கார்த்திக்.