ரோகித்-டிராவிட் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அதுக்கு அப்புறமும் கில் உள்ளே வந்தது, என்னுடைய இடம் காணாமல் போனது எல்லாம் இப்படித்தான் – கண் கலங்கிய ஷிகர் தவான்!

0
1809

எதற்காக தன்னை நீக்கி விட்டு சுப்மன் கில்லை தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் விளையாட வைக்கிறார்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ஷிகர் தவான்.

இந்திய அணியின் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் ஷிகர் தவான். இருதரப்பு தொடர்களில் தனது ஒரு பங்கு ஆட்டத்தை கொடுத்தால் ஐசிசி தொடர்கள் என்று வந்துவிட்டால் இன்னும் கூடுதல் பலத்துடன் விளையாடக்கூடிய ஒருவராக ஷிகர் தவான் இருந்தார்.

- Advertisement -

பல வருடங்கள் ரோகித் சர்மாவுடன் இணைந்து ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார். மூன்றுவித போட்டிகளிலும் விளையாடி வந்த ஷிகர் தவான், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட வைக்கப்பட்டார். அதில் சிறந்த பங்களிப்பையும் கொடுத்து வந்தார்.

50 ஓவர் உலகக்கோப்பை இந்தாண்டு வரவுள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. தொடர்ந்து மூன்று ஒருநாள் தொடர்களில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணியின் புதிய துவக்க வீரராக சுப்மன் கில் தொடர்ந்து விளையாட வைக்கப்பட்டு வருகிறார். அபரமாகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு பேக்கப் வீரராக அணியில் இசான் கிஷன் இருக்கிறார். ஆகையால் மொத்தமாக ஷிகர் தவான் இடம் காணாமல் போனது. இனி இந்த வருடம் நடக்கவுள்ள 50-ஓவர் உலகக்கோப்பை க்கும் இவர் திட்டத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

- Advertisement -

எதற்காக ஓரம் கட்டப்பட்டோம், எதன் அடிப்படையில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் முதலில் கொடுக்கப்பட்டது என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ஷிகர் தவான்.

“ரோகித் சர்மா டிராவிட் இருவரும் எனக்கு அதிக அளவில் ஆதரவு கொடுத்தார்கள். நிறைய வாய்ப்புகளும் கொடுத்தார்கள். அதன் பிறகும் என்னுடைய பார்ம் சற்று சரிவை சந்தித்ததால் சுப்மன் கில் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வீரராக தெரிந்துள்ளார். ஆகையால் அவரை விளையாட வைத்தார்கள். சமீபத்தில் அவர் இருந்து வரும் பார்ம் இன்றியமையாதது. ஆகையால் அவருக்கு கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தற்போது முதன்மை வீரராகவும் விளையாட வைக்கப்படுகிறார். அதில் எந்த தவறும் இல்லை. இதற்கு முன்னரும் மோசமான பார்மில் இருந்த வீரர்கள் வெளியில் அமர்த்தப்பட்டு, பல இளம் வீரர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். கிரிக்கெட்டில் இது காலம்காலமாக நடக்கக் கூடியவை தான். என்று மிகவும் முதிர்ச்சியுடனும் நேர்த்தியாகவும் பதில் கொடுத்தார் ஷிகர் தவான்.