நியூசிலாந்து தொடரிலிருந்து ரோகித், கோலி விலக வாய்ப்பு.. காரணம் இது தான்

0
10883

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூரில் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மாவும் நட்சத்திர வீரர் விராட் கோலியும் இந்த போட்டியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு தயாராக வேண்டும் என்பதால் நியூசிலாந்து தொடரிலிருந்து ரோகித்  சர்மா, கோலி ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட்  விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி நியூசிலாந்து தொடரிலிருந்து வெளியேறி, வரும் 24ம் தேதி தொடங்கும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இரண்டு நட்சத்திர வீரர்களும் விளையாடி டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருநாள் போட்டியை போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சாதிக்க வேண்டும் என்றால் ரஞ்சிப் போட்டிகள் விளையாடி தன்னுடைய திறமையை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவும் டெஸ்ட் போட்டியில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கூட அவர் விளையாடவில்லை. அதனால் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி டெஸ்ட் போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோன்று ஆல் ரவுண்டர் ஜடேஜா, அஸ்வின்,ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களும் ஆஸ்திரேலிய தொடருக்கும் முன்பு ரஞ்சி போட்டியில் விளையாடினால் பார்ம்க்கு திரும்பும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அடுத்து தேர்வு குழுவினர், சீனியர் வீரர்களான விராட் கோலி,ரோகித் சர்மாவை நியூசிலாந்து தொடரிலிருந்து நீக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.