“கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் அறிவு இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்” – ரோகித் சர்மா வெளிப்படையான பேச்சு!

0
66
Indian cricket team

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி இருந்தது. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி இருந்தது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை ஆக்ரோஷமாக இருந்தது.

ஆனால் தொடர் ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழானது. பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அப்படியே நிலைகுலைந்து போனார்கள். இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அணுகுமுறையில் அடித்தாடும் எண்ணமில்லை மாறாக அவர்கள் தற்காப்பு உத்தியோடு மட்டுமே விளையாடினார்கள்.

மேலும் இந்திய அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் முதலில் பேட் செய்யும் பொழுது எதிரணிக்கு இலக்கை நிர்ணயிப்பதில் தடுமாறிய வந்தது. காரணம் பேட்டிங்கில் தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைப்பிடிக்காதுதான். இதனால் தேவைக்கு குறைவாக 15 முதல் 20 ரன்களை குறைவாகவே இந்திய அணி எடுத்து வந்தது.

இந்தக் காரணங்களால் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளோடு முதலில் பேட் செய்து சொற்ப ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவி தொடரிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.

அப்பொழுது இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த தோல்விக்கான காரணமாக குறிப்பிட்டது அக்ரசீவ் இன்டன்ட் உடன் வீரர்கள் விளையாடாததுதான் என்று தெளிவாக குறிப்பிட்டார். பின்பு இந்திய அணிக்கு ரோகித் சர்மா புதிய கேப்டன் ஆகவும், ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராகவும் வந்த பிறகு இந்தக் குறைகள் எல்லாம் சரி செய்யப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை தாக்குதல் பாணியில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் ஏதாவது தோல்விகள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து தாக்குதல் பாணி முறையிலேயே இந்திய வீரர்கள் பேட் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இந்திய அணியின் விழுவாய் தாக்குதல் பாணி பேட்டிங் என்பது அணிக்குள் புதிய கலாச்சாரமாக கொண்டுவரப்பட்டது. தற்போது ரோகித் சர்மாவின் இந்திய அணி இந்த முறையில் தான் பேட்டிங் அணுகுமுறையை கொண்டிருக்கிறது!

தற்போது இது குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” ஒரு அணிக்கு என்ன தேவை ஒரு அடியை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறோம் என்பது குறித்து கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கு சரியான தெளிவு இருந்தால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அதை பின்பற்ற செயல்படுத்த செய்வார்கள். அப்படி அவர்கள் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, அவர்களுக்கு சுதந்திரமும் தெளிவும் தேவை. அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம. முடிந்தவரை அவர்களுக்கு சுதந்திரம் தர விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்!