இந்த 3 வீரர்கள் வருங்கால இந்திய கேப்டன் பதவிக்கு தகுதியானவர்கள் – இளம் வீரர்கள் குறித்து ரோகித் பெருமிதம்

0
1003
Rohit Sharma

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்து விட்டு அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. கோலி, பண்ட், ராகுல், சூர்யகுமார், சஹார் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ரோகித் தலைமையிலான இந்திய அணி நாளை களம் காண்கிறது. லக்னோவில் வைத்து நாளை இந்த போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் மோசமான தோல்வியை தழுவிய நிலையில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்கிறது.

இலங்கையை அணியிலும் கொரோனா பிரச்சினை காரணமாக அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஹசரங்கா விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்கா தான் அதிக விலைக்கு சென்ற இலங்கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பங்கேற்காதது இலங்கை அணிக்கு நிச்சயம் மோசமான செய்தியாக அமையும்.

- Advertisement -

நாளை இந்த தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார் இந்திய அணியின் கேப்டன் ரோகித். அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறிய ரோகித் இந்திய அணியில் அவருக்கு பிறகு கேப்டன் பொறுப்புக்கு வரக்கூடிய ஆட்கள் பற்றியும் பேசினார். ரோகித் பேசும்போது பும்ரா, ராகுல் மற்றும் பன்ட் ஆகியோர் வருங்கால இந்திய அணிக்கு கேப்டன் பதவி வகிக்கலாம் என்று பேசியுள்ளார். இதில் பும்ரா தற்போதைய துணை கேப்டனாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராகுல் மற்றும் பண்ட் என இருவருமே ஐபிஎல் தொடரில் தங்களது அணிக்கு கேப்டனாக இருப்பவர்கள். இந்த மூவரும் வருங்கால இந்திய அணிக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று தற்போதைய கேப்டன் ரோகித் பேசியுள்ளார். ரோஹித்துக்கு விரைவில் 35 வயது ஆக இருப்பதால் தற்போதே அடுத்த கேப்டனின் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி வந்துள்ளது.

மூன்று வித கிரிக்கெட்டும் விளையாடும் வீரர்கள் தான் நிச்சயம் அடுத்த கேப்டனாக வருவார் என்பதால் வீரர்கள் தங்களது உடல் தேவையை மெருகேற்றிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது எல்லாவற்றையும் விட தற்போதைய கேப்டன் ரோகித் தனக்கு முன்னால் இருக்கும் அத்தனை சவால்களையும் சந்தித்து இந்திய அணிக்கு முக்கியமான கோப்பை ஒன்று பெற்றுத்தருவதாக என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -